பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
00:29

மும்பை:வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பாக, புதிய வங்கி துவங்குவதற்கான உரிமம் வழங்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.மும்பையில், இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, நிதியமைச்சர் கூறியதாவது:
புதிய வங்கி உரிமம் மற்றும் துவங்குவதற்கான நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கங்களையும், ரிசர்வ் வங்கி, சென்ற வாரம் அறிவித்தது. வங்கி சேவைஇதையடுத்து, புதிய வங்கி துவங்குவதற்கான உரிமம், வரும் 2014ம் ஆண்டு, மார்ச் மாதத்திற்கு முன்பிலிருந்து, துவங்கப்படும்.
உள்நாட்டில், வங்கி சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், புதிய வங்கி துவங்குவதற்கான உரிமம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, சிறிய நகரங்கள், பின்தங்கிய மாவட்டங்களில், புதிய வங்கிகள் கிளைகளை துவங்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக, நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் புதிய வங்கி கிளைகள் துவங்கப்படும். நடப்பு 2013-14ம் நிதியாண்டில், பல வங்கிகள் அதிக எண்ணிக்கையில், கிளைகளை துவங்க திட்டமிட்டுள்ளன. இது, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
வட்டி விகிதம்:நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, முதலீட்டு திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், வங்கிகள், சில்லரை மற்றும் நிறுவன கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும். கடந்த 2012ம் ஆண்டு, துவக்கத்திலிருந்து, இதுவரை யிலுமாக, ரிசர்வ் வங்கி, "ரெப்போ' வட்டி விகிதங்களை, 1.25 சதவீதம் குறைத்துள்ளது. ஆனால், வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 0.30 சதவீத அளவிற்கே குறைத்துள்ளன.நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கமும், டெபாசிட்டிற்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளன. எனவே, வங்கிகள், சில்லரை மற்றும் நிறுவன கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.
நாட்டின் பொதுப் பணவீக்கம் அதிகமாக உள்ளது. ரபி பருவத்திற்கான அறுவடை முடிந்து, தானியங்கள் முழு அளவில் சந்தைக்கு வரும் நிலையில், பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|