"அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்புதிய வங்கி உரிமம் வழங்கப்படும்'"அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்புதிய வங்கி உரிமம் வழங்கப்படும்' ... மக்காச்சோளம் விலை மேலும் உயரும்:தமிழ்நாடு வேளாண் பல்கலை., தகவல் மக்காச்சோளம் விலை மேலும் உயரும்:தமிழ்நாடு வேளாண் பல்கலை., தகவல் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உருக்கு உற்பத்தி வளர்ச்சி: இந்தியா முன்னிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2013
00:34

புதுடில்லி:கடந்த 2012-13ம் நிதியாண்டில், உலகளவில், உருக்கு உற்பத்தி வளர்ச்சியில், இந்தியா முன்னிலை வகிப்பதாக, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில், உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
சென்ற நிதியாண்டில், இந்தியா, 7.81 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, முந்தைய 2011-12ம் நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (7.34 கோடி டன்) விட, 5.86 சதவீதம் அதிகமாகும்.இந்நிலையில், உலகளவில், உருக்கு உற்பத்தியில், முதலிடத்தில் உள்ள சீனா, சென்ற நிதியாண்டில், 72.63 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது.
இது, இதற்கு முந்தைய, 2011-12ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை(68.92 கோடி டன்) விட, 5.39 சதவீதம் அதிகமாகும்.உலகின் மொத்த உருக்கு உற்பத்தியில் (152.10 கோடி டன்), சீனாவின் பங்களிப்பு, பாதி அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில், சென்ற நிதிஆண்டில், உருக்கு உற்பத்தி, 1.59 சதவீதம் என்ற அளவில்தான் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, சென்ற நிதியாண்டில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி வளர்ச்சி, நல்ல அளவில் உயர்ந்துள்ளதாக, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
உலகளவில், உருக்கு உற்பத்தியில், ஜப்பான் நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்ற நிதியாண்டில், இந்நாட்டின் உருக்கு உற்பத்தி, 10.73 கோடி டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதிஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உருக்கு உற்பத்தியை (10.65 கோடி டன்) விட, 0.78 சதவீதம் அதிகமாகும்.உருக்கு உற்பத்தியில், அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில், இந்நாட்டின் உருக்கு உற்பத்தி, 1.61 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, இந்நாட்டின் உருக்கு உற்பத்தி, 8.84 கோடி டன்னிலிருந்து, 8.69 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.
கணக்கீட்டு நிதியாண்டில், ரஷ்யாவின் உருக்கு உற்பத்தி, 0.17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6.96 கோடி டன்னாக உயர்ந்து உள்ளது. அதேசமயம், தென்கொரியாவின் உருக்கு உற்பத்தி, 1.62 சதவீதம் குறைந்து, 6.82 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது என, உலக உருக்கு கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)