பதிவு செய்த நாள்
07 ஜூன்2013
00:37

கோவை:கோழித் தீவன தயாரிப்பில், முக்கிய மூலப் பொருளாக விளங்கும் மக்காச் சோளத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப, அதன் உற்பத்தி இல்லை என்பதால், மக்காச் சோளம் விலை உயரும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (டி.என்.ஏ.யு.,) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின், ஏற்றுமதி சந்தை நுண்ணாய்வு பிரிவு, கடந்த 17 ஆண்டுகளாக, உடுமலைப்பேட்டை சந்தையில் நிலவிய மக்காச் சோளத்தின் விலையை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
சாகுபடி:அதன் அடிப்படையில், ஒரு குவிண்டால் மக்காச் சோளத்தின் விலை, நடப்பு ஜூன்-ஜூலை மாதங்களில், 15 ஆயிரம் ரூபாயை தாண்டும் என்று கணித்துள்ளது. இதையடுத்து, விவசாயிகள், மக்காச் சோளத்தை இருப்பில் வைத்திருந்து, விலை ஏறும்போது விற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்தியாவில், மக்காச் சோளம், கோடை மற்றும் குளிர்காலம் என, இரு பருவங்களில், சாகுபடி செய்யப்படுகிறது.
பொதுவாக, கோடை சாகுபடியில், மக்காச் சோளம் மக‹ல் அதிகம் இருக்கும்.சென்ற 2012-14ம் நிதியாண்டில், இந்தியாவில், 86.70 லட்சம் ஹெக்டேரில் மக்காச் சோளம் பயிரிடப் பட்டது. இதன் மூலம், 2.25 கோடி டன் சோளம் உற்பத்தியானது. ஆசியாவில்,அதிக அளவில் மக்காச் சோளம் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
கோழி தீவனம்:மக்காச் சோளம் உற்பத்தி, இரு பருவங்களை மட்டுமே சார்ந்துள்ளதும், கோழித் தீவன துறையின் தேவை அதிகரித்துள்ளதும், மக்காச் சோளம் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.2012-13ம் குளிர் கால, ரபி சாகுபடியில், மக்காச் சோளம் உற்பத்தி, 55 லட்சம் டன் என்ற அளவிற்கே இருக்கும் என, டி.என்.ஏ.யு., கணித்துள்ளது. பீகாரில் மட்டும், ரபி பருவ விளைச்சல், கடந்த ஆண்டை விட, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இதர மாநிலங்களின் மக்காச் சோளம் உற்பத்தி குறைந்துள்ளது.
மக்காச் சோளம், கோதுமை, சோயா புண்ணாக்கு உள்ளிட்ட கோழித் தீவனங்களுக்கான தேவை, பெருகி வருகிறது.கோழித் துறையின் சந்தை மதிப்பு, 360 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறை, ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆண்டுக்கு, 30 லட்சம் டன் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையிலும், இந்திய மக்காச் சோளத்திற்கான தேவை உயர்ந்து வருகிறது. கடந்த 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் மக்காச் சோளம் ஏற்றுமதி, 1.90 லட்சம் டன்னாக இருந்தது. இது, 2011-12ம் நிதியாண்டில், இரு மடங்கு அதிகரித்து, 4.80 லட்சம் டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைத்தது.நடப்பு 2013ம் காலண்டர் ஆண்டில், இந்தியாவின் மக்காச் சோளம் ஏற்றுமதி, 3 - 3.50 லட்சம் டன் என்ற அளவிற்கே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி:கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில், மக்காச்சோளத்திற் கான தேவை அதிகரிக்கும் என்பதால், அதன் ஏற்றுமதி குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.மேலும், நடப்பாண்டு மக்காச்சோளம் உற்பத்தியில், அமெரிக்கா புதிய சாதனை படைக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நாடு அதிக அளவில், மக்காச் சோளத்தை ஏற்றுமதி செய்யும் என்பதால், சர்வதேச சந்தையில், இதர நாடுகளின் பங்களிப்பு குறையும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|