நாட்டின் உருக்கு பயன்பாடு1.17 கோடி டன்னாக குறைவுநாட்டின் உருக்கு பயன்பாடு1.17 கோடி டன்னாக குறைவு ... சம்பளம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை': விஜய் மல்லைய்யா கைவிரிப்பு சம்பளம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை': விஜய் மல்லைய்யா கைவிரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
புண்ணாக்கு ஏற்றுமதி 3 லட்சம் டன்னாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2013
00:14

மும்பை:நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 3,02,837 டன்னாக சரிவடைந்து உள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 3,59,855 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 16 சதவீதம் சரிவடைந்துள்ளது.
வியட்நாம்:தென்கொரியா, ஈரான் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளில், புண்ணாக்கிற்கான தேவை குறைந்துள் ளதால், இதன் ஏற்றுமதி வீழ்ச்சி கண்டு உள்ளது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள் ளது. நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு மாதங்களிலும் (ஏப்ரல் மற்றும் மே), நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி சரிவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக, சென்ற ஏப்ரல் மாதத்தில், இதன் ஏற்றுமதி, 51 சதவீதம் சரிவடைந்து, 1,99,168 டன்னாக வீழ்ச்சி கண்டிருந்தது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய, இரு மாத காலத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 34 சதவீதம் சரிவடைந்து, 5,02,005 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 7,62,945 டன்னாக உயர்ந்து காணப்பட்டது.
இதே மாதங்களில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 57 சதவீதம் குறைந்து, 4,56,420 டன்னில் இருந்து, 1,95,943 டன்னாகசரிவடைந்துள்ளது.சர்வதேச அளவில், இந்திய புண்ணாக்கிற்கான தேவை சரிவடைந்துள்ளது மட்டு மின்றி, டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சியும், இதன் ஏற்றுமதியை வெகுவாக பாதித் துள்ளது.அதாவது, சென்ற ஏப்ரல் மாதத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 54.32 ரூபாய் என்றிருந்த நிலை யில், இது, மே மாதத்தில், 54.98 ரூபாயாக மேலும் வீழ்ச்சி கண்டது.
இதையடுத்து, சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒரு டன் சோயா புண்ணாக்கு விலை, 616 டாலராக (33,868 ரூபாய்) இருந்த நிலையில், மே மாதத்தில், 618 டாலராக (33,978 ரூபாய்) உயர்ந்தது. இதே போன்று கடுகு புண்ணாக்கு விலையும், 1 டாலர் அதிகரித்து, 272 டாலராக உயர்ந்தது.தென்கொரியாவிற்கான, புண்ணாக்கு ஏற்றுமதி, 7 சத வீதம் சரிவடைந்து, 2,12,388 டன்னில் இருந்து, 1,98,367 டன்னாகசரிவடைந்துள்ளது.
ஈரான் நாடு:இதே போன்று, ஈரான் நாட்டிற்கான, இதன் ஏற்றுமதியும், 1,50,974 டன்னிலிருந்து, 1,48,234 டன்னாக குறைந்துள்ளது. மேலும், தாய்லாந்து நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 67,026 டன்னிலிருந்து, 48,047 டன்னா கவும், வியட்னாம் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 88,825 டன்னிலிருந்து, 26,545 டன்னாகவும் வீழ்ச்சி கண்டு உள்ளது.
ஜப்பான் நாட்டிற்கான,புண்ணாக்கு ஏற்றுமதி, 84,989 டன்னிலிருந்து, 10,141 டன்னாக மிகவும் சரிவடைந்துள்ளது. ஐரோப்பா மற்றும் இதர நாடுகளுக்கான இதன் ஏற்றுமதி, 28,844 டன்னிலிருந்து, 12,237 டன்னாக சரிவடைந் துள்ளது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மேலும் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)