பதிவு செய்த நாள்
09 ஜூன்2013
00:29

புதுடில்லி:பருத்தி உற்பத்தியில் முன்னிலையில் உள்ள சீனாவை, அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியா பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும் என, உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்ஏஓ) தெரிவித்துள்ளது.பயிரிடும் பரப்பளவு வரும் ஆண்டுகளில், சீனாவில், பருத்தி பயிரிடும் பரப்பளவு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவில், இதன் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, அடுத்த பத்து ஆண்டுகளில், சீனாவில் இதன் உற்பத்தி, 17 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில், பருத்தி உற்பத்தி, 25 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளில், சீனாவை காட்டிலும், இந்திய ஜவுளி துறை, சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில், பருத்தி பயன்பாடு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வேளாண் அமைச்சகம் :இந்நிலையில், நடப்பு 2012-13ம் பருவத்தில் (ஜூலை -ஜூன்), நாட்டின் பருத்தி உற்பத்தி, 338 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.வரும் 2022ம் ஆண்டில், உலக அளவில், பருத்தி பயன்பாடு, 1.7 சதவீதம் உயர்ந்து, 2.72 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இதன் உற்பத்தி, ஆண்டுக்கு, 1.6 சதவீதம் என்ற அளவில் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|