பதிவு செய்த நாள்
09 ஜூன்2013
00:32

சென்னை:நேற்று ஒரே நாளில், தங்கம் விலை சவரனுக்கு, 328 ரூபாய் சரிவடைந்து, 20,712 ரூபாய்க்கு விற்பனையானது.தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரி உயர்வால், சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று திடீரென அதன் விலை குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,630 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,040 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 41 ரூபாய் குறைந்து, 2,589 ரூபாய்க்கும் சவரனுக்கு, 328 ரூபாய் சரிவடைந்து, 20,712 ரூபாய்க்கும் விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 435 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 27,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 46.20 ரூபாய் என்ற அளவிலும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,215 ரூபாய் என்ற அளவிலும் இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|