பதிவு செய்த நாள்
09 ஜூன்2013
00:36

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற மே மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 417 கோடி டாலர் (22,935 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,789 கோடி டாலராக (15.83 லட்சம் கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 11 கோடி டாலர் (605 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,206 கோடி டாலராக (16.06 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்து காணப்பட்டது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 300 கோடி டாலர் சரிவடைந்து, 25,850 டாலராகவும், கையிருப்பில் உள்ள தங்கம்,110 கோடி டாலர் குறைந்து, 2,283 கோடி டாலராகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.மேலும், எஸ்.டீ.ஆர்., மற்றும் சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு முறையே, 430 கோடி டாலர் மற்றும் 220 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|