பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
00:09

புதுடில்லி: நாட்டின் முன்பேர சந்தைகளில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல், மே ஆகிய இரு மாதக் காலத்தில், 28,16,133 கோடி ரூபாய்க்கு, வர்த்தகம் நடைபெற்று உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 26,90,834 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், முன்பேர சந்தைகளின் வர்த்தகம், 4.66 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் மீதான வர்த்தகம், 40.27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.88 லட்சம் கோடியிலிருந்து, 6.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம், 4.23 சதவீதம் அளவிற்கே அதிகரித்து, 12.98 லட்சம் கோடியிலிருந்து, 13.53 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், வேளாண் விளை பொருட்கள் மீதான வர்த்தகம், 26.46 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3.45 லட்சம் கோடியிலிருந்து, 2.54 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.இதே போன்று, தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 6.19 சதவீதம் சரிவடைந்து, 5.61 லட்சம் கோடியிலிருந்து, 5.26 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.உள்நாட்டில், தேசிய அளவில், 6 சந்தைகளும், மண்டல அளவில், 16 முன்பேர சந்தைகளும் உள்ளன. கடந்த, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் முன்பேர சந்தைகளின் வர்த்தகம், அதற்கு முந்தைய நிதியாண்டை காட்டிலும், 6 சதவீதம் சரிவடைந்து, 170.47 லட்சம் கோடியாக இருந்தது என, எப்.எம்.சி., அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|