பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
00:11

மும்பை: நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு கணாத அளவில், 58.14 ஆக வீழ்ச்சி கண்டது.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், முன் எப்போதும் இல்லாத அளவாக, ரூபாயின் மதிப்பு, 57.32 ஆக இருந்ததே, அதிகபட்ச சரிவாக கருதப்பட்டது. அதன் பின், தற்போது தான், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, கடும் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு கணக்கு பற்றாக்குறைஇறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு, டாலருக்கான தேவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும், ரூபாய் மதிப்பு, 106 காசுகள் வரை சரிவடைந்து, 58.14 ஆக வீழ்ச்சி கண்டது. ஒரு கட்டத்தில், வர்த்தகத்தின் இடையே, ரூபாயின் மதிப்பு, 58.17 வரை குறைந்திருந்தது. இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்ததையடுத்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால், இறக்குமதி செலவினம் மேலும் அதிகரிக்கும். இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும். அது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மிகவும் சரிவடைந்துள்ளதால், பல நாடுகளின் இறக்குமதியாளர்கள், இந்திய ஏற்றுமதியாளர்களிடம், பொருட்களின் விலையில் தள்ளுபடி செய்து தரும்படி கேட்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர், டிப்பன் ஷா கூறியதாவது: கடந்த ஒரு சில தினங்களாக, அன்னிய நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து, முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றன. கடன் சந்தையிலும், இந்நிறுவனங்களின் முதலீடு குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதிமத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், ரூபாயின் வெளிமதிப்பின் சரிவு நிலை, கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு டிப்பன் ஷா தெரிவித்தார்.சர்வதேச சந்தையில், நேற்று, டாலருக்கு எதிரான, ஜப்பான் யென் மற்றும் ஆஸ்திரேலியா டாலர் ஆகியவற்றின் வெளிமதிப்பும் சரிவைக் கண்டன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|