பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
00:14

மும்பை: விதிமுறைகளின்படி செயல்படாத மூன்று தனியார் துறை வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, 10.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.இதன்படி, ஆக்சிஸ் வங்கிக்கு, 5 கோடி ரூபாயும், எச்.டீ.எப்.சி., வங்கிக்கு, 4.50 கோடி ரூபாயும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு, 1 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.மேற்கண்ட வங்கிகள் மீது, வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுதல், ஹவாலா பணப் பரிமாற்ற தடுப்பு விதிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றாதது, நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கும் அதிகமாக தங்க நாணயங்களை விற்பனை செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அண்மையில், கோப்ராபோஸ்ட் இணையதளம், மேற்கண்ட மூன்று வங்கிகள், ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி, ஹவாலா பணப் பரிமாற்றத்திற்கு துணை புரிந்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மூன்று வங்கிகளுக்கு, அபராதம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|