பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
00:20

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதன்படி, 270 நாட்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்தில், 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக மேற்கொள்ளப்படும் (என்.ஆர்.ஓ., டெபாசிட் உட்பட) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், 270 நாட்கள் மற்றும் ஒரு ஆண்டு காலத்திற்குள், 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி, 8.50 சதவீதத்திலிருந்து, 8.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.இதே போன்று, ஒரு ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியும், 9 சதவீதத்திலிருந்து, 8.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.இது தவிர, 2 - 3, 3 - 5 மற்றும் 5 - 10 ஆண்டு காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், தலா, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வட்டி விகிதம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, இவ்வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|