பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
00:25

சென்னை: நேற்று, தங்கம் விலை சவரனுக்கு, 152 ரூபாய் உயர்ந்து, 20,864 ரூபாய்க்கு விற்பனையானது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து, வீழ்ச்சி கண்டு வருவதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சனிக்கிழமையன்று, சற்று குறைந்திருந்த தங்கம் விலை, நேற்று மீண்டும் அதிகரித்தது. சென்னையில், கடந்த சனிக்கிழமையன்று, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 2,589 ரூபாய்க்கும், சவரன், 20,712 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்தத் தங்கம், 27,690 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று தங்கம் விலையில், கிராமுக்கு, 19 ரூபாய் உயர்ந்து, 2,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 152 ரூபாய் அதிகரித்து, 20,864 ரூபாய்க்கு விற்பனையானது.10 கிராம் சுத்தத் தங்கம், 200 ரூபாய் உயர்ந்து, 27,890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 46.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,475 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|