பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
00:27

புதுடில்லி: சர்வதேச நிலவரங்களால், நடப்பு 2013ம் ஆண்டில், ஜனவரி முதல் இது வரையிலுமாக, நாட்டின் காபி ஏற்றுமதி, 1.72 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தை (1.78 லட்சம் டன்) விட, 2.85 சதவீதம் குறைவு என, காபி வாரியம் தெரிவித்து உள்ளது.சர்வதேச அளவில், காபி உற்பத்தி, தேவையை விட அதிகரித்துள்ளது. இதனால், உலகளவில், காபியின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, நாட்டின் காபி ஏற்றுமதி, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.குறிப்பாக, பிரேசில் நாட்டில், காபி அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு விவசாயிகள், கையிருப்பில் உள்ள காபியை, இன்னும் முழு அளவில் விற்பனைக்கு அனுப்பவில்லை.கணக்கீட்டு காலத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 2,609 கோடி ரூபாயிலிருந்து, 2,545 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நடப்பாண்டு ஜூன் மாதத்தின் முதல் வாரம் வரையிலுமாக, ரோபஸ்டா வகை காபி ஏற்றுமதி, 93,213 டன்னாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டின் இதே காலத்தில், இதன் ஏற்றுமதி, 98,863 டன்னாக இருந்தது. அரபிகா வகை காபி ஏற்றுமதியும், 36,843 டன்னிலிருந்து, 35,560 டன்னாக சரிவடைந்துள்ளது.அதேசமயம், ஒட்டு மொத்த மறு காபி ஏற்றுமதி, 26,558 டன்னிலிருந்து, 32,701 டன்னாக அதிகரித்துள்ளது. நம் நாட்டிலிருந்து, இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் அதிகளவில் காபியை இறக்குமதி செய்து கொள்கின்றன. "இன்ஸ்டன்ட்' காபியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றுமதியாகிறது.நடப்பு பருவத்தில் (அக்.,-செப்.,), உள்நாட்டில் காபி உற்பத்தி, 3.16 லட்சம் டன்னாக இருக்குமென, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2011-12ம் பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 1,500 டன் அதிகம் என, காபி வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|