பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
00:29

புதுடில்லி: இந்தியாவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள், வரும் 2014ம் ஆண்டில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத்திற்காக, 4,480 கோடி டாலர் அளவிற்கு செலவிடும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.முதலீடுஇதுகுறித்து, ஆய்வு நிறுவனமான ஐ.டீ.சி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:கடந்த, 2012ம் ஆண்டு முதல் வரும், 2014ம் ஆண்டு வரை, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப செலவினம், 1,000 கோடி டாலர் அதிகரிக்கும். குறிப்பிட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீடு குறித்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால், ஐ.டி., செலவினம் உயர்ந்து வருகிறது.குறிப்பிடத்தக்க அளவிற்கு பெருகி வரும் சந்தை வாய்ப்புகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், உயர் நடுத்தர வருவாயினருக்கான சந்தை வளர்ச்சி, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு துறைகளின் எழுச்சி ஆகிய மூன்று பிரிவுகள், வேகமான வளர்ச்சியை கண்டு வருகின்றன."கிளவுட் கம்ப்யூட்டிங்' போன்ற மென்பொருள் பயன்பாடு, டேப்லெட் உள்ளிட்ட, பல வகை சாதனங்களுக்கு பெருகி வரும் வரவேற்பு போன்றவற்றால், நிறுவனங்கள் மட்டுமின்றி, தனிநபர்களும், ஐ.டி., வசதிக்காக செலவிடுவது அதிகரித்து உள்ளது.செயல்பாடுஅரசு துறைகளும், முழு வீச்சில் கம்ப்யூட்டர் சார்ந்த ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதால், ஐ.டி., துறைக்காக செலவிடுவது தொடரும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|