பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
00:32

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் துவக்க மாதமான ஏப்ரலில், தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமியம் வருவாய், 19 சதவீதம் உயர்ந்து, 1,334 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 1,125 கோடி ரூபாயாக இருந்தது.ரிலையன்ஸ் லைப்எஸ்.பீ.ஐ. லைப் இன்‹ரன்ஸ், எச்.டீ.எப்.சி. ஸ்டாண்டர்ட் லைப் இன்‹ரன்ஸ், மேக்ஸ் லைப் இன்‹ரன்ஸ், ரிலையன்ஸ் லைப் இன்‹ரன்ஸ் ஆகிய தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமியம் வருவாய், குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.வங்கிகளுடன் இணைந்து, ஆயுள் காப்பீட்டு சேவை வழங்கி வரும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் புதிய பிரிமியம் வருவாய் அதிகரித்து உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், எஸ்.பீ.ஐ. லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின் முதலாமாண்டு பிரிமியம் வருவாய், 65 சதவீதம் உயர்ந்து, 173 கோடி ரூபாயில் இருந்து, 285 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், எச்.டீ.எப்.சி. லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின் முதலாமாண்டு பிரிமியம் வருவாய், 44 சதவீதம் அதிகரித்து, 114 கோடியில் இருந்து, 160 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல்மேக்ஸ் லைப் இன்‹ரன்ஸ் நிறுவனம், புதிய பிரிமியம் வாயிலாக, 113 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் ஈட்டியதை (98 கோடி ரூபாய்) விட, 15 சதவீதம் அதிகமாகும்.அதே சமயம், இதே மாதங்களில், ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைப் இன்‹ரன்ஸ்
நிறுவனத்தின் முதலாமாண்டு பிரிமியம் வருவாய், 39 சதவீதம் சரிவடைந்து, 169 கோடியில் இருந்து, 102 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
அது போன்று, பிர்லா சன்லைப் மற்றும் மெட்லைப் நிறுவனங்களின் முதலாமாண்டு பிரிமியம் வருவாய், முறையே, 37 சதவீதம் மற்றும் 44 சதவீதம் குறைந்து உள்ளது.சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியா பர்ஸ்ட் லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின், முதலாமாண்டு பிரிமியம் வருவாய், 268 சதவீதம் அதிகரித்து, 22 கோடியில் இருந்து, 83 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மந்த நிலைஅது போன்று, பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின் புதிய முதலாமாண்டு பிரிமியம் வருவாய், 14 சதவீதம் அதிகரித்து, 89 கோடியில் இருந்து, 101 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டு, சர்வதேச நாடுகளின் பொருளாதார நெருக்கடி, உள்நாட்டில், தொழில் துறையின் மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதல் பிரிமியம் வருவாய் குறைந்திருந்தது.சென்ற, 2012-13ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதல் பிரிமியம் வருவாய், 1,07,013 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. இது, இதற்கு முந்தைய, 2011-12ம் நிதியாண்டில், 1,14,234 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
ஆக, மதிப்பீட்டு நிதியாண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதல் பிரிமியம் வருவாய், 6.32 சதவீதம் சரிவடைந்துள்ளது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர். டி.ஏ.,) தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனம்
சென்ற நிதியாண்டில்,
தனியார் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதல் பிரிமியம் வருவாய், 20,767 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 32,728 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.இதே போன்று, பொதுத் துறையைச் சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,) ஆப் இந்தியாவின், முதல் பிரிமியம் வருவாய், 81,451 கோடியிலிருந்து, 76,245 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|