பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
10:01

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(ஜூன் 11ம் தேதி, செவ்வாய்கிழமை) சரிவுடன் துவங்கி இருக்கின்றன இந்திய பங்குசந்தைகள். வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 77.45 புள்ளிகள் சரிந்து 19,363.62 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 24.80 புள்ளிகள் சரிந்து 5,853.20 எனும் அளவிலும் காணப்பட்டது.
தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு நிலை காணப்படுவதால் இந்திய பங்குசந்தைகளும் சரிவுடன் காணப்படுவதாக பங்குவர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இன்று இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 58.35 எனும் உச்ச நிலையை தொட்டது.
இந்திய பங்குசந்தைகள் தவிரத்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங் சேங் 0.90 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.82 சதவீதமும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|