பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
10:10

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. நேற்று வர்த்தகநேர முடிவில் ரூ.58.16 எனும் புதிய உச்ச நிலை சரிவை தொட்ட இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஜூன் 11ம்தேதி) வர்த்தகநேர துவக்கத்தில் மேலும் 19 காசுகள் சரிந்து ரூ.58.35-ஆகவும், பின்னர் மதியத்திற்கு மேல் ரூ.58.96 எனும் உச்சநிலை சரிவையும், இறுதியில் வர்த்தகநேர முடிவில் ரூ.58.39 எனும் நிலையிலும் முடிந்தது.
இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு அமெரிக்க டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு நிலை ஏற்பட்டு இருப்பதாக அந்நிய செலாவணி தொழில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டு இருக்கும் கடும் சரிவு நிலை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|