பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
14:22

புதுடில்லி: குறைந்த பயண நேரம் கொண்ட, உள்நாட்டு விமானங்களில், இலவசமாக உணவு வழங்குவதை நிறுத்திவிட, ஏர் - இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான, அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையின் போது, பயணிகளுக்கு உணவு வழங்குவதை, சில தனியார் விமான நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. பணம் செலுத்தும் பயணிகளுக்கு மட்டும் உணவு வழங்கி வந்தது. ஆனால், ஏர் - இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானங்களில், உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஏர் - இந்தியா நிறுவனம், 90 நிமிடங்களுக்கும் குறைவாக பயண நேரமுள்ள, உள்நாட்டு விமானங்களில், இலவச உணவு வழங்குவதை நிறுத்தியது. விமான எரிபொருள் செலவு அதிகரிப்பு உட்பட, பல்வேறு பிரச்னைகளால், ஏர் இந்தியா நிறுவனம், பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்நாடு விமான சேவையின் போது, ஒரு மணி நேரத்திற்கு குறைவான பயண நேரமுள்ள விமானங்களில் இனிமேல் தண்ணீர் பாட்டில்கள் கூட கிடைக்காது. அந்த வகையில், எவ்வித உணவு பொருட்களும் வழங்குவதில்லை என்று முடிவு எடுக்க உள்ளது. இருப்பினும், இந்த முடிவு ஆலோசனை நிலையில் உள்ளதாகவும், தீவிரமாக அமல்படுத்துவது பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என, ஏர் - இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|