பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
15:16

புதுடில்லி : இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி தற்காலிமானது தான் இன்னும் மூன்று நான்கு நாட்களில் சரியாகிவிடும் என மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரு தினங்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 58-ஐ தாண்டியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுப்பற்றி கவலை கொள்ள வேண்டாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் அரவிந்த் மாயாராம் கூறியிருப்பதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி கவலை அளிக்கும் விஷயம் தான். ஆனால் இது தற்காலிகம் தான். இன்னும் சில தினங்களில் வெளிநாட்டு தொழில்துறை முதலீடுகளும் மூலம் நம் நாட்டுக்கு நிறைய முதலீடு பெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்படும் சரிவு நிலை குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். முதலீட்டாளர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|