பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
16:59

மும்பை : வாரத்தின் முதல்நாளில் ஏற்ற, இறக்கத்துடன் முடிந்த இந்திய பங்குசந்தைகள், இரண்டாம் நாளான இன்று (ஜூன் 11ம் தேதி) சரிவுடன் தொடங்கின. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி கண்டன. ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்து ரூ.58.96 எனும் உச்சநிலை சரிவை சந்தித்தன. இதனால் இந்திய பங்குசந்தைகளும் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 298.07 புள்ளிகள் சரிந்து 19,143 எனும் நிலையிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 89.20 புள்ளிகள் சரிந்து 5,788.80 எனும் நிலையிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 24 நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன. குறிப்பாக நிலக்கரி சுரங்கம் தொடர்பான முறைகேட்டில் சிபிஐ, ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்த காரணத்தினால், கடந்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு அந்நிறுவனத்தின் பங்குகள் விலை 15.18 சதவீதம் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|