பதிவு செய்த நாள்
12 ஜூன்2013
00:01

சென்னை: நேற்று, தங்கம் விலை சவரனுக்கு, 24 ரூபாய் உயர்ந்து, 20,888 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரம், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து விறு விறுப்புடன் உயர்ந்து வருகிறது.
தங்கம் இறக்குமதிக்கு, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதும், இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம் தங்கம், 2,608 ரூபாய்க்கும், 1 சவரன், 20,864 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்தத் தங்கம், 27,890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 2,611 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 24 ரூபாய் அதிகரித்து, 20,888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 35 ரூபாய் உயர்ந்து, 27,925 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை மிகவும் குறைந்திருந்தது. அந்த நிலை மீண்டும் திரும்ப, அதிக வாய்ப்பில்லை. தங்கம் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு அதிக தீவிரம் காட்டி வருகிறது. அத்துடன் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவது பொருளாதாரத்தின் பலவீனத்தை காட்டுவதாகும்.மேலும், பணவீக்க உயர்வு, ஏற்றுமதி அளவு குறைவு ஆகியவை நமது பொருளாதாரத்திற்கு இடைஞ்சல் தரும் அம்சங்கள். இந்த நிலையில் தங்கம் விலை முன்புபோல அதிரடி வீழ்ச்சி காண வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|