ஆபரண தங்கம் விலை மேலும் விறு விறு...ஆபரண தங்கம் விலை மேலும் விறு விறு... ... ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி தொடருமா? விழி பிதுங்கி நிற்கிறது ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி தொடருமா? விழி பிதுங்கி நிற்கிறது ... ...
நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.11 ஆயிரம் கோடி : சென்ற நிதியாண்டில் புதிய சாதனை...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2013
00:02

கொச்சி: சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையால், ஒட்டு மொத்த அளவில், நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்து உள்ளது. இந்நிலையில், கடந்த 2012-13ம் நிதியாண்டில், நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதாக, நறுமணப் பொருட்கள் வாரியத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இலக்கை விஞ்சியதுகடந்த நிதியாண்டில், நாட்டின் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, முதன் முறையாக, அளவின் அடிப்படையில், 22 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 14 சதவீதமும் வளர்ச்சி கண்டு உள்ளது. ஆக, இதன் ஏற்றுமதி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2012-13ம் நிதியாண்டில், நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி அளவின் அடிப்படையில், 6.99 லட்சம் டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 11,171 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், இவை, முறையே, 5.75 லட்சம் டன் மற்றும் 9,783 கோடி ரூபாயாக இருந்தன.கடந்த நிதியாண்டில், நறுமணப் பொருட்கள் வாரியம், அளவின் அடிப்படையில், 5.66 லட்சம் டன்னும், மதிப்பின் அடிப்படையில், 8,204 கோடி ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது.இந்நிலையில், இதன் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 124 சதவீதமும், ரூபாய் மதிப்பு அடிப்படையில், 136 சதவீதமும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு நிதியாண்டில், சீரகம், புதினா மற்றும் மிளகாய் வற்றல் ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.இவை தவிர, ஏலக்காய் (பெரியது), தனியா, கடுகு, ஜாதிகாய், பூண்டு, புளி, பெருங்காயம், கறிமசாலா தூள், ஓலியோரெசின் போன்றவற்றின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.அதேசமயம், மிளகு, ஏலக்காய் (சிறியது), இஞ்சி போன்றவற்றின் ஏற்றுமதி, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் குறைந்துள்ளது.சீரகம் ஏற்றுமதி, 79,900 டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு, 1,093 கோடி ரூபாயாகும். முந்தைய நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 45,500 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 644 கோடி ரூபாயாகவும் இருந்தது.தனியா ஏற்றுமதிபெருஞ்சீரகம் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 80 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 58 சதவீதமும் அதிகரித்துள்ளது. தனியா ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 37,100 டன்னும், மதிப்பின் அடிப்படையில், 210.77 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.மதிப்பு கூட்டப்பட்ட புதினா ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 35 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 49 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. ஒட்டு மொத்த அளவில், புதினா பொருட்கள் ஏற்றுமதி, 19,980 டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு, 3,322 கோடி ரூபாயாகும்.பூண்டு ஏற்றுமதிமதிப்பீட்டு நிதியாண்டில், பூண்டு ஏற்றுமதி, வெறும், 2,200 டன்னிலிருந்து, 24 ஆயிரம் டன்னாக பன்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து, இதன் ஏற்றுமதி மதிப்பு, 14.15 கோடியிலிருந்து, 74.49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே போன்று, மிளகாய் வற்றல் ஏற்றுமதி, 2.41 லட்சம் டன்னிலிருந்து, 2.81 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதன் ஏற்றுமதி மதிப்பு, 2,144 கோடியிலிருந்து, 2,261 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், கணக்கீட்டு நிதியாண்டில், சிறிய வகை ஏலக்காய் ஏற்றுமதி, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில், குறைந்துள்ளது. இருப்பினும், பெரிய ஏலக்காய் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 18 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 8 சதவீதமும் அதிகரித்துள்ளது என, நறுமணப் பொருட்கள் வாரியத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)