ஏப்ரல் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி சரிவுஏப்ரல் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி சரிவு ... தங்கம் சவரனுக்கு ரூ.24 குறைவு தங்கம் சவரனுக்கு ரூ.24 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் விற்பனை தொடர்ந்து ஏழு மாதங்களாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2013
00:08

புதுடில்லி:நாட்டின் கார் விற்பனை, தொடர்ந்து ஏழாவது மாதமாக, சென்ற மே மாதத்தில், சரிவடைந்துள்ளதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.பொருளாதார சுணக்க நிலை, பணவீக்க உயர்வு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால், இந்திய மோட்டார் வாகன சந்தை மிகவும் மந்த நிலையில் உள்ளது.
அதிகரிப்பு:ஒரு சில முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை குறைவால், வாகன உற்பத்தியை குறைத்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற மே மாதத்தில், உள்நாட்டில், கார் விற்பனை, 1,43,216 ஆக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 1,63,222 ஆக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், கார் விற்பனை, 12.26 சதவீதம் சரிவடைந்துள்ளது.
வேலை வாய்ப்பு:இதுகுறித்து, "சியாம்' அமைப்பின் தலைமை இயக்குனர் விஷ்ணு மாத்தூர் கூறியதாவது:தொடர்ந்து ஏழு மாதங்களாக, கார் விற்பனை சரிவடைந்துள்ளது. இதற்கு முன்பு, அதாவது, 2008-09ம் நிதியாண்டில், கார் விற்பனையில், சுணக்கம் காணப்பட்டது. ஆனால், அவ்வாண்டில், ஒரு சில மாதங்கள் மட்டுமே, கார் விற்பனை மந்தமாக இருந்தது.
தற்போதைய நிலை, மோட்டார் வாகன துறைக்கு, பின்னடைவை ஏற்படுத்துவதுடன், மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. உள்நாட்டில், வேலை வாய்ப்பு பெருகுவது குறைந்து போயுள்ளது. இதனால், நுகர்வோர், வாகனங்கள் வாங்கு வதை ஒத்தி போட்டு வருகின்றனர். இதுவும், வாகன விற்பனையை பாதிப்பதாக உள்ளது.இதே நிலை நீடித்தால், மோட்டார் வாகன துறையிலும், அதிகளவில் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சென்ற மே மாதத்தில், கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள, மாருதி சூசுகி இந்தியா நிறுவனத்தின், உள்நாட்டு கார் விற்பனை, 8.25 சதவீதம் சரிவடைந்து, 66,342 ஆக குறைந்துள்ளது.அதேசமயம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 0.35 சதவீதம் உயர்ந்து, 32,052 ஆக சற்று அதிகரித்துள்ளது. ஆனால், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின், கார் விற்பனை, 48.60 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 8,927 ஆக சரி வடைந் துள்ளது.ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 9.31 சதவீதம் உயர்ந்து, 11,274 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்கூட்டர்:அதேசமயம், சென்ற மே மாதத்தில், பன்முக பயன்பாட்டு வாகனங்கள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றின் விற்பனை எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.இந்நிலையில், கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை, தொடர்ந்து 15வது மாதமாக பின்னடைவை கண்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனையும், தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்து உள்ளது.
குறிப்பாக, சென்ற மே மாதத்தில், மோட்டார் சைக்கிகள் விற்பனை, 0.72 சதவீதம் குறைந்து, 8,81,288 ஆக சரிவடைந் துள்ளது.கடந்தாண்டு இதே மாதத்தில், இவற்றின் விற்பனை, 8,87,646 ஆக சற்று உயர்ந்து காணப் பட்டது. ஹோண்டா ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை, 2.11 சதவீதம் குறைந்து, 4,92,044 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை, 2.6 சதவீதம் உயர்ந்து, 2,12,129 ஆக அதிகரித்துள்ளது.ஹோண்டா மோட்டார் சதவீதம் சரிவடைந்து, 85,866 ஆக குறைந்துள்ளது என, "சியாம்' அமைப்பு மேலும் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)