பதிவு செய்த நாள்
13 ஜூன்2013
00:14
புதுடில்லி:நடப்பு, 2013-14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (ஏப்.,-மார்ச்), இந்தியாவின் கோதுமை உற்பத்தி, 8.70 கோடி டன்னாக குறையும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டீ.ஏ.,) தெரிவித்துள்ளது.இது, மத்திய அர சின் மதிப்பீட்டு அளவான, 9.36 கோடி டன்னை காட்டிலும், 7 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், கோதுமை அதிகம் விளையும், பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில், இதன் உற் பத்தி, முந்தைய ஆண்டை காட்டிலும், 8-10 சதவீதம் வரை குறையும் என, முதல் கட்ட ஆய்வின் மூலம் தெரிய வந் துள் ளது.இதையடுத்து, இந்தியாவின் கோதுமை உற்பத்தி, சரிவடையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்தில், மத்திய அரசின் கோதுமை கொள்முதல், 2.60 கோடி டன் என்ற அளவில் தான் இருக்குமென, எதிர்பார்க்கப் படுகிறது. இது, கடந்த பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை (3.82 கோடி டன்) காட்டிலும், 1.22 கோடி டன் குறைவாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|