தங்கம் சவரனுக்கு ரூ.24 குறைவுதங்கம் சவரனுக்கு ரூ.24 குறைவு ... தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் மந்த நிலை தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் மந்த நிலை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சில்லரை பணவீக்கம் 9.31 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2013
00:15

புதுடில்லி:நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற மே மாதத்தில், 9.31 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
சமையல் எண்ணெய்:இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 9.39 சதவீதம் என்ற அளவிலும், மார்ச் மாதத்தில், 10.39 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது. ஆக, தொடர்ந்து மூன்று மாதங்களாக, சில்லரை பணவீக்கம் குறைந்து வருகிறது.மதிப்பீட்டு மாதத்தில், சமையல் எண்ணெய் மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ள நிலையில், காய்கறிகளின் விலை மிகவும் உயர்ந்துள்ளது.
சென்ற மே மாதத்தில், ஒட்டு மொத்த உணவு மற்றும் பானங்களின் விலை, 10.65 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது, ஏப்ரல் மாதத்தில், 10.61 சதவீதம் என்ற அளவில் இருந்தது. குறிப்பாக, காய்கறிகளின் விலை, மதிப்பீட்டு மாதத்தில், 9.78 சதவீதம் அளவிற்கு மிகவும் அதிகரித்து உள்ளது.இது, ஏப்ரல் மாதத்தில், 5.43 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.இருப்பினும், புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களின் விலை, சென்ற மே மாதத்தில், 12.52 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 13.60 சதவீதம் என்ற அளவில்மிகவும் உயர்ந்து காணப்பட்டது.
சென்ற ஏப்ரலில், 7.52 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்ட, சமையல் எண்ணெய் விலை, மே மாதத்தில், 5.49 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.ஆண்டுக் கணக்கு அடிப்படையில், முக்கிய உணவு தானியங்களுக்கான பணவீக்கம், மிகவும் அதிகபட்சமாக, சென்ற மே மாதத்தில், 16.29 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
சர்க்கரை:மேலும், பருப்பு வகைகளுக்கான பணவீக்கம், 9.59 சதவீதம் என்ற அளவிலும், சர்க்கரைக்கான பணவீக்கம், 9.21 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றிற்கான பணவீக்கம், 9.72 சதவீதம் என்ற அளவில் உள்ளது.சென்ற மே மாதத்தில், நகர்புற பகுதிகளில், சில்லரை பணவீக்கம், 9.65 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஏப்ரல் மாதத்தில், 9.73 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)