பதிவு செய்த நாள்
13 ஜூன்2013
10:11

மும்பை : வாரத்தின் நான்காம் நாளான இன்று(ஜூன் 13ம் தேதி, வியாழக்கிழமை) இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் சென்செக்ஸ் 19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது.
வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 225.56 புள்ளிகள் சரிந்து 18,815.57-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 60.25 புள்ளிகள் சரிந்து 60.25 ஆகவும் இருந்தது.
சன்பார்மா பங்குகள் விலை 6 சதவீதமும் சரிந்தது, தொழில்துறை உற்பத்தியில் சரிவு, சில்லரை வர்த்தக பணவீக்கம் சரிவு, ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்து இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 4.67 சதவீதம் சரிந்தும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 2.61 சதவீதமும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|