பதிவு செய்த நாள்
13 ஜூன்2013
14:46

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டின் தேசிய "டிவி' நிலையம் மூடப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. குறிப்பாக கிரீஸ் நாட்டில், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை, அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளாக, இந்த நிலை தொடர்கிறது. ஜெர்மன் நாடு, ஐரோப்பிய வங்கி உள்ளிட்டவை இணைந்து, அந்நாட்டின் பொருளாதார நிலையை சமாளித்து வருகின்றன.
கிரீஸ் நாட்டின் அரசு துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது; மானியங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் நிலைமையை சமாளிக்க முடியாததால், அரசு"டிவி' நிலையம் நேற்று முதல் மூடப்பட்டு விட்டது. இந்த நிலையத்தில் பணியாற்றிய, 2,500 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, ஏதென்ஸ் நகரில் உள்ள, "ஹெலனிக் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்' முன்பாக நிருபர்களும், "டிவி' நிலைய ஊழியர்களும் நேற்று போராட்டம் நடத்தினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|