பதிவு செய்த நாள்
13 ஜூன்2013
17:06

மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவிலும் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 213.97 புள்ளிகள் சரிந்து 18,827.16 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 61.10 புள்ளிகள் சரிந்து 5,699.10 எனும் அளவிலும் முடிந்தன.
அந்நிய முதலீடு தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு விற்பனை செய்ததாலும், ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகள் விலை சரிந்ததாலும் இந்திய பங்குசந்தைகளில் சரிவு காணப்பட்டன. முன்னதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய பொருளாதாரத்தை சீர்ப்படுத்த இன்னும் இரண்டு மூன்று தினங்களில் பல்வேறு அறவிப்புகள் வெளியாக இருக்கின்றன. ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சியும் சரியாகிவிடும், முதலீட்டாளர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று நம்பிக்கை அளித்தார். ஆனபோதும் இந்திய பங்குசந்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை, தொடர்ந்து சென்செக்ஸ் 19 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில், 25 பங்குகள் விலை மிகவும் சரிந்து காணப்பட்டன. குறிப்பாக அப்போலா டயர்ஸ் பங்குகள் விலை 25.43 சதவீதமும், சன்பார்மா பங்குகள் விலை 3.22 சதவீதமும், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் விலையும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|