பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
01:09

கோல்கட்டா:நடப்பு 2012-13ம் பருவத்தின் (நவ., - அக்.,), முதல் ஏழு மாத காலத்தில் (நவ., - மே), நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 10.43 சதவீதம் அதிகரித்து, 61.97 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த எண்ணெய் பருவத்தின், இதே காலத்தில், 56.11 லட்சம் டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது. சென்ற மே மாதத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 9.17 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (8.97 லட்சம் டன்) விட, 2 சதவீதம் அதிகமாகும்.
இதே மாதத்தில், ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெய் பங்களிப்பு, 8.92 லட்சம் டன்னாகவும், சமையல் சாராத எண்ணெய் பங்களிப்பு, 25,898 டன்னாகவும் உள்ள
ஜூன் 1ம் தேதி வரையிலுமாக, பல்வேறு துறைமுகங்கள் மற்றும் குழாய்களில் உள்ள சமையல் எண்ணெய் இருப்பு முறையே, 6.75 லட்சம் டன் மற்றும் 13 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.நடப்பு பருவத்தின், முதல் ஏழு மாத காலத்தில், பாமாயில் இறக்குமதி, 41.64 அதேசமயம், இதர எண்ணெய் இறக்குமதி, 13.22 லட்சம் டன்னிலிருந்து, 9.47 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது என, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.
சர்வதேச தர நிர்ணயநிறுவனமான பிட்ச்., இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை, இடர்பாடானது என்ற நிலை யில் இருந்து, ஸ்திர தன்மைக்கு மாற்றியது.இதையடுத்து, ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில், டாலர்களை விற் பனை செய்தனர். வங்கிகளும் கூடுதலாக டாலரை புழக்கத்தில் விட்டன. இதன் காரணமாக,நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு, 57.79ல் நிலை பெற்றது.
இந்நிலையில்,நேற்று (வியாழன்), மத்திய அரசு, அன்னிய முதலீடுகளை ஈர்க்க, ஐந்து அம்ச திட்டங்களை அறி விக்க உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.எனினும், ரூபாய்மதிப்பு, முந்தைய நாளை விட, 20 பைசா சரிவடைந்து, 57.99 ஆக நிலை பெற்றது. அன்னிய செலாவணி வர்த்தகத்தின் இடையே, ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு, 58.38 வரை கீழிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|