பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
10:13

மும்பை : வாரத்தின் கடைசி நாளில் சென்செக்ஸ் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. நேற்று(ஜூன் 13ம் தேதி) சென்செக்ஸ் 19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்த நிலையில் இன்று(ஜூன் 14ம் தேதி) பங்குசந்தையில் காணப்பட்ட ஏற்றத்தால் சென்செக்ஸ் மீண்டும் 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 195.52 புள்ளிகள் உயர்ந்து 19,022.68 எனும் நிலையிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 58.15 புள்ளிகள் உயர்ந்து 5,757.25 எனும் நிலையிலும் காணப்பட்டது.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 2.59 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.99 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட இருப்பதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நேற்று நம்பிக்கை அளித்ததை தொடர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் ஆசிய பங்குசந்தைகளிலும் ஏற்றம் காணப்படுவதால் இந்திய பங்குசந்தைகளும் உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|