பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
12:21

"டாஸ்மாக்' கடைகளில், குறைந்த விலை, "பீர்'களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கூடுதல் விலை உள்ள, பீர் வாங்க வேண்டிய நிலைக்கு, "குடி'மகன்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 15க்கும் மேற்பட்ட பீர் வகைகள், ரகத்திற்கு ஏற்றவாறு, 70 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்திற்கு தேவையான பீர் வகைகள், வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. தற்போது, தமிழகத்தில், ஆறு பீர் தொழிற்சாலைகள் உள்ளதால், தேவையான அளவிற்கு பீர் வகைகள், இங்கேயே தயாரிக்கப்படுகின்றன. இதனால், பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. ஆனால், ஏற்கனவே குறைந்த விலைக்கு விற்பனையான முன்னணி நிறுவனங்களின், பீர் "பிராண்டு'களில் கூடுதல் பெயர் சேர்க்கப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உதாரணமாக, சில பீர் வகைகளில், "சூப்பர், மெகா ஸ்டிராங், மேக்ஸ்' என்ற பெயர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, டாஸ்மாக் கடைகளில், ஏழை "குடி'மகன்கள் அதிகம் வாங்கும், பீர் விற்பனை செய்யப்படாமல், 100 மற்றும் 110 ரூபாய் பீர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அதிக விலை கொடுத்து, பீர் வாங்க வேண்டிய நிலைக்கு, அனைத்து குடிமகன்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர் கூறும்போது, "பீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அதிக விலை பீர்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது, பீர் விற்பனை குறைவிற்கு தான் வித்திடும்' என்றார்.
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில்லரை தட்டுப்பாட்டை போக்கவே, 100 ரூபாய் பீர் விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மக்கள் அதிகம் விரும்பும் பீரை, அதிக அளவு கொள்முதல் செய்கிறோம்' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|