பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
16:59

மும்பை : வாரத்தின் இறுதிநாளில் நல்ல ஏற்றத்துடன் முடிந்தது இந்திய பங்குசந்தைகள். சென்செக்ஸ் 350 புள்ளிகளும், நிப்டி 109 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன.
இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்து வந்தன. இந்நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரத்தை இன்னும் சீர்திருத்துவது தொடர்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட இருப்பதாகவும், ரூபாயின் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி தற்காலிகம் தான், முதலீட்டாளர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று நம்பிக்கை அளித்தார். அதன்வெளிப்பாடாக இன்று(ஜூன் 14ம் தேதி) காலையே ஏற்றத்தில் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, பணவீக்கம் குறைந்தது. இதனால் இந்திய பங்குசந்தைகள் மேலும் உயர தொடங்கின.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 350.77 புள்ளிகள் உயர்ந்து 19,177.93-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 109.30 புள்ளிகள் உயர்ந்து 5,808.40 எனும் அளவிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 26 பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் பங்குகள் 3.15 சதவீதமும், இன்போசிஸ் 0.88 சதவீதமும், ஐ.டி.சி 1.41 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன. இவைகள் தவிர ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், மாருதி உள்ளிட்ட நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.
இந்திய பங்குசந்தைகள் போன்றே ஆசியாவின் பிற பங்குசந்தைகள் மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளும் உயர்வுடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|