பதிவு செய்த நாள்
15 ஜூன்2013
00:10
சென்னை:நேற்று, தங்கம் விலை சவரனுக்கு, 312 ரூபாய் குறைந்து, 20,760 ரூபாய்க்கு விற்பனையானது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவால், சில தினங்களாக உயர்ந்து வந்த, தங்கம் விலை, நேற்று திடீரென சரிவடைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,634 ரூபாய்க்கும், சவரன், 21,072 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 28,175 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை, கிராமுக்கு, 39 ரூபாய் குறைந்து, 2,595 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 312 ரூபாய் சரிவடைந்து, 20,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 425 ரூபாய் குறைந்து, 27,750 ரூபாய்க்கு விற்பனையானது.
ஒரு கிராம் வெள்ளி, 46.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதுகுறித்து, தங்கம் ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வலுவடைந்து வருகிறது. இதுவும் தங்கம் விலை குறைவிற்கு முக்கிய காரணம்' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|