"சென்செக்ஸ்' 351 புள்ளிகள் அதிகரிப்பு"சென்செக்ஸ்' 351 புள்ளிகள் அதிகரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு!! ...
நடப்பு ஆண்டு மே மாதத்தில்...நாட்டின் பொது பணவீக்கம் 4.70 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2013
00:19

புதுடில்லி:நடப்பு 2013ம் ஆண்டு மே மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம், 4.70 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 4.89 சதவீதம் என்ற அளவிலும், கடந்தாண்டு மே மாதத்தில், 7.55 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது என, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்கள்:சென்ற மே மாதத்தில், தயாரிப்பு துறை பொருட்களின் விலை, 3.11 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 3.41 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
மதிப்பீட்டு மாதத்தில், நூலிழை, எண்ணெய் வித்துக்கள், தாதுப் பொருட்கள் உள்ளிட்ட உணவு சாரா பொருட்களுக்கான பணவீக்கம்,4.88 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 7.59 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
உணவு சாரா பொருட்களுக்கான பணவீக்கம் குறைந்துள்ள அதே வேளையில், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், மிகவும் அதிகரித்துள்ளது.குறிப்பாக, சென்ற மே மாதத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், 8.25 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, சென்ற ஏப்ரல் மாதத்தில், 6.08 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு, காய்கறிகள், வெங்காயம், முக்கிய உணவு தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வே காரணமாகும்.குறிப்பாக, கணக்கீட்டு மாதத்தில், காய்கறிகளின் விலை, 4.85 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், மைனஸ் 9.05 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைவை கண்டிருந்தது.மேலும், வெங்காயத்தின் விலை, சென்ற மே மாதத்தில், 97.40 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரலில், 91.69 சதவீதம் குறைந்து இருந்தது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், கோதுமை விலை, 12.65 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 13.89 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
இதே போன்று, சென்ற ஏப்ரலில்,மைனஸ் 2.42 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்த உருளைக் கிழங்கின் விலை, மே மாதத்தில், மைனஸ் 3.44 சதவீதம் என்ற அளவில் @மலும் சரிவடைந்து உள்ளது.
அதேசமயம், சென்ற மே மாதத்தில், முட்டை, மீன் மற்றும் இறைச்சி ஆகியவற்றிற்கான பணவீக்கம், 11.21 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில், 10.44 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
மின்சாரம்:மதிப்பீட்டு மாதத்தில், பருப்பு வகைகளின் விலையும், 5.95 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்துள்ளது.அதேசமயம், அரிசி மற்றும் முக்கிய உணவு தானியங்களின் விலை முறையே, 18.48 சதவீதம் மற்றும் 16.01 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
சென்ற மே மாதத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கான பணவீக்கம், 7.32 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. இது, இதற்கு அடுத்த ஏப்ரல் மாதத்தில், 8.84 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
அண்மையில், வெளியிடப்பட்ட சென்ற மே மாதத்திற்கான சில்லரை விலை பணவீக்கமும், கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக, 9.31 சதவீதமாக குறைந்துள்ளது.
தங்கம் இறக்குமதி:சென்ற மார்ச் மாதத்தில், பொதுப் பணவீக்கம், 5.96 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, தற்காலிக மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 5.65 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது:
பணவீக்கம் குறைந்திருப்பது திருப்தி அளிக்கிறது. ரிசர்வ் வங்கி, இதை கணக்கில் கொண்டு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை குறைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
தங்கம் இறக்குமதி குறைந்து வருவதால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, குறையும். இவ்வாறு மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)