நடப்பு ஆண்டு மே மாதத்தில்...நாட்டின் பொது பணவீக்கம் 4.70 சதவீதமாக சரிவுநடப்பு ஆண்டு மே மாதத்தில்...நாட்டின் பொது பணவீக்கம் 4.70 சதவீதமாக சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு!! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சக்திமானாக துள்ளி ஓடும் போக்ஸ்வேகனின் புதிய போலோ எகூ கூகுஐ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2013
11:25

சிக்கென்று கச்சிதமாய், ஸ்டைலாய், புதிய தொழில்நுட்பங்களுடன், சக்தி வாய்ந்த, சொகுசான ஒரு ஹாட்ச்பேக் கார் ஃபோக்ஸ்வேகனின் புதிய போலோ ஆகும். புதிய போலோ GT TSI போன மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு கார் ரசிகர்கள் மிகவும் கவர்ந்துள்ளது. இந்த சக்திமிக்க பெட்ரோல் என்ஜின் மாடல் அதிக செயல்திறனை விரும்புவோர்க்கென பிரத்தியேகமாக, அதே நேரம் சொகுசு மற்றும் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துக் கொள்ளாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோ GT TSI மாடலில் சிறப்பம்சங்கள் நிறையவே உள்ளன.

வெளிப்புறத்தோற்றம்

* கருப்பு நிற பின்புலத்தில் பளிச்சென்று தெரியும் ஹேலோஜென் ஹெட்லேம்ப்கள்
* சூட்டை உள்நுழையவிடாத பக்கவாட்டு மற்றும் பின்புற கண்ணாடிகள்
* பாடி கலரிலேயே கொடுக்கப்பட்டுள்ள கைப்பிடி மற்றும் கியர் வ்யூ மிர்ரர்.
* அலாய் வீல்கள் மற்றும் முன்புற ஃபாக் லைட்கள்
* முன்புற க்ரோம் க்ரில்லில் உள்ள எகூ பேட்ஜ் போன்றவை இதன் வெளிப்புற தோற்றத்தை வசீகரமாக்குகிறது.
உட்புற வசதிகள்
* உயர்தரமான "மிலன்' டைட்டன்ஸ்வாஸ் துணியினால் ஆன, ஹைட், அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட சீட்கள்.
* ஸ்டியரிங் வீல், ஹேன்ட் ப்ரேக் மற்றும் கியர் நாப்கள் உயர்தரமான லெதரினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
* முன்புற கன்சோலில் உள்ளது 12 வோல்ட் அவுட்லெட் ஸ்டியரிங் நடுவில் உள்ளது ஆடியோ மற்றும் ஃபோன் கன்ட்ரோல் ஸ்டியரிங்கில் உயரத்தையும் தூரத்தையும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.
* கால் பெடல்கள் எல்லாம் அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமாய் உள்ளது.

போலோ GT TSI யின் பாதுகாப்பு அம்சங்கள்

* ப்ரேக்கின் வெப்பம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டாலும் ப்ரேக்கின் வடிவமைப்பு அதை சுலபமாய் மாற்றி விடுகிறது. முன்புற டிஸ்க் ப்ரேக்கர் மிகவும் சிறப்பாய் உள்ளது. இக்னீஷன் சாவியை எடுத்த உடனேயே எலக்ட்ரானிக் என்ஜின் இம்மொபலைசர் இசியு உடன் சேர்ந்து இயக்கம் பெற துவங்கிவிடுகிறது.
* மில்லி செகன்ட் நேரத்தில் அபாயகரமான ஓட்டும் விதத்தை கண்டறிந்து எச்சரிக்கும் சென்சார்கள் கொண்ட இஎஸ்பி (எலக்ட்ரானிக் ஸ்டபிலைசேஷன் ப்ரோக்ராம்) இதில் உள்ளது.
* மலையேற்றத்தின்போது கீழே சரிந்து விடாமல் பாதுகாக்கும் "ஹில் ஹோல்ட் ஃபங்ஷன்' இதில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
* ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை நபர்களின் பாதுகாப்பிற்கென முன்புறம் மற்றும் பக்கவாட்டிலும் ஏர்பேக்கள் போலோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
போலோ GT TSI மாடல் 1.2 லிட்டர் TSI என்ஜின் மூலம் சிறப்பான வேகத்தை எட்ட முடியும் என்பதுடன் 105 ககு சக்தியும் 7 ஸ்பீட் ட்யூவல் ஷிஃப்ட் கியர் பாக்ஸ் கொண்டு ஒரு திறமையான ஓட்டுனரின் கனவுகளை நினைவாக்கக் கூடியதாய் உள்ளது. ஜெர்மானிய பொறியியல் தொழில்நுட்பத்தை இதன் வித்தியாசமான வளைவு நெளிவுகள் கொண்ட வெளிப்புற தோற்ற அமைப்பிலும், அதிக சக்தி மிக்க செயல்திறனிலும், புதுமையான பாதுகாப்பு தொழில்நுட்பங்களிலும் ஒருங்கே காண முடிகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)