டிஜிட்டல் மயமாகிறது தூர்தர்ஷன்டிஜிட்டல் மயமாகிறது தூர்தர்ஷன் ... வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.1.20 லட்சம் கோடி:கொத்தவரை பங்களிப்பு ரூ.21,287 கோடி வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.1.20 லட்சம் கோடி:கொத்தவரை பங்களிப்பு ரூ.21,287 கோடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கண்களை கைது செய்யும் அழகு வெரிட்டோ வைப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2013
16:19

இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தியாளரும், உறுதியான வாகனங்களுக்கு பெரிய நிறுவனமுமான மஹிந்திரா - மஹிந்திராவின் புதிய அறிமுகம்தான் வெரிட்டோ வைப் என்ற நாட்ச்பேக் (காம்பேக்ட் செடான்) கார். ஃபோர்ட் ஃபிகோ, மாருதி ஸ்விஃப்ட், ஷெவர்லே பீட் போன்றவற்றிற்கு கடும் போட்டியாக வந்துள்ள வெரிட்டோ வைப் டீசல் வெர்ஷனில் D2, D4, D6, என்ற மூன்று வேரியன்ட்களில் வந்துள்ளது. நவீன அம்சங்களான ஏபிஎஸ் ப்ரேக்கிங் ட்ரைவர் ஏர்பேக், அலாய் வீல், பின்புற டீஃபாகிங், யுஎஸ்பி மற்றும் யுஎக்ஸ் உள்ளடக்கிய மியூசிக் சிஸ்டம் (D6 மாடலில் மட்டும்)போன்றவற்றை கொண்டுள்ளது மட்டுமல்லாமல் லிட்டருக்கு 20.8 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது என்பதும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் சிறந்த அம்சங்களாகும்.

வெரிட்டோ வைப் - பார்க்க


பார்த்தவுடன் மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஸ்போர்டியாக ஸ்டைலான தோற்றம் கொண்டுள்ளது வெரிட்டோ வைப். உறுதியான அதே நேரம் கச்சிதமான இதன் கட்டமைப்பு பார்த்தவுடன் பிடித்துப்போகும்படி உள்ளது. இதன் வெளிப்புற அழகை மேலும் மெருகூட்டும் மற்ற விஷயங்கள் ஷாம்பெயின் அலாய் வீல்கள், கார்பன் ஃபினிஷ் கொண்ட முன்புற க்ரில், சிறகுகள் போன்ற வடிவத்தில் உள்ள பின்புற க்ரோம் ப்ளேட், பின்புற பம்பர் இரண்டு நிறங்களில் உள்ளது. அழுத்த வடிவில் வீல் ஆர்ச்கள் லேமினேட்டர் வின்ட்ஷீல்ட், செதுக்கப்பட்டது போன்ற அழுத்தமான கோடுகள் கொண்ட பின்புற பூட் லிட் என்று பார்ப்போர் கண்களை கைது செய்கிறது இதன் வடிவமைப்பு.

வெரிட்டோ வைப் - பயணிக்க

ஐந்து பேர் தாராளமாய் அமர்ந்து செல்லக்கூடிய இடவசதி இதிலுள்ளது. உயரமானவர்க்கும் தலை இடிக்காத வண்ணம், தோள்கள் உராயாத வண்ணம், கால்களை நீட்டி வைத்துக் கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது இக்கார். உடனடியாக குளிர்ச்சியை பரவச் செய்யும் ஏசியும், உயர்தர இருக்கைத் துணிகளும், பொருட்கள் வைக்க தாராள இடமும் கொண்டுள்ளது வைப். பயணிகள் அமரும் இடம் தாராளமாகவும், பின்புற இருக்கை நல்ல அகலமாகவும், 330லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் இடவசதியும், நான்கு நிறங்கள் கொண்ட டாஷ்போர்டின் அழகும், எலக்ட்ரிக் வெளிப்புற ரியர் வ்யூ கண்ணாடியும், உறுதியான, சுலபமாய் இயங்கும் கைப்பிடிகளும் கொண்டுள்ளதால் வெரிட்டோ வைப்பின் பயணம் மிகவும் வசதியாகவும் சுகமாகவும் மனதை ஈர்க்கிறது.

வெரிட்டோ வைப்பின் செயல்திறன் - நம்பிக்கை கொள்ள

வெரிட்டோவின் செயல்திறனும் நம்பகத்தன்மையும் வெரிட்டோ வைப்பிலும் பிரதிபலிக்கிறது. இதன் 1.5லிட்டர் Dci என்ஜின் சிறந்த பவரையும் டார்க்கையும் வழங்கக்கூடிய உலகறிந்த திறன் கொண்ட டீசல் என்ஜினாகும். இதன் நவீன தொழில்நுட்பத்திறனின் எடுத்துக் காட்டே இக்கார். லிட்டருக்கு 20.8 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது என்பது மேலும் ஒரு சிறப்பம்சம். மைலேஜ், தட்ப வெப்பம், எவ்வளவு தூரத்திற்கான எரிபொருள் உள்ளது போன்ற ஓட்டுனருக்கான எச்சரிக்கை அளிக்கும் ட்ரைவர் இன்பர்மேஷன் சிஸ்டம் இதன்மேல் உள்ள நம்பிக்கையை இரட்டிப்பாக்குகிறது.

வெரிட்டோ வைப்பின் நவீன சஸ்பென்ஷன் பெரிய பள்ளங்களையும் அதிர்வின்றி கடக்கிறது. பொறுப்பாய் இயங்கும் ஸ்டியரிங்கும், கையாள சுலபமாய் இருப்பதும் அதிக வேகத்திலும் ஸ்திரமான பயமற்ற பயணத்தை வழங்குவதும் இக்காரை திறமையாய் ஓட்டும் நம்பிக்கையை ஓட்டுனருக்கு வழங்குகிறது.

வெரிட்டோ வைப் - பாதுகாக்க

பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும் பலவித அம்சங்கள் இதில் உள்ளது. பிடியுடன் இணைந்த ஏபிடி ப்ரேக்கிங் சிஸ்டம், ஓட்டுனருக்கான ஏர் பேக், பின்புற பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கென கொடுக்கப்பட்டுள்ள க்ராஸ் மெம்பர், பக்கவாட்டு பாதுகாப்பிற்கென கொடுக்கப்பட்டுள்ள பீம்கள் என்று வெரிட்டோ வைப்பின் பயணம் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது.

வெரிட்டோ வைப் - பராமரிக்க

வாங்கின பின்பு பராமரிப்பிற்கென மெனக்கெட வேண்டிய அவசியம் இன்றி வாடிக்கையாளர் நிம்மதியாக இருக்கும் பொருட்டு 3வருடம் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் (இதில் எது சீக்கிரமோ) என்ற சிறப்பான வாரண்டியை வழங்குகிறது மஹிந்திரா - மஹிந்திரா.

வெரிட்டோ வைப் - மொத்தத்தில்

சிறப்பான செயல்திறன் கொண்ட என்ஜின், நல்ல மைலேஜ், ஸ்டைலான வெளிப்புறத்தோற்றம், நம்பகமான ப்ராண்ட் என்று சந்தையை கலக்க வந்துள்ளது வெரிட்டோ வைப்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)