கொப்பரை வரத்து குறைந்ததால்தேங்காய் எண்ணெய் விலை உயர்வுகொப்பரை வரத்து குறைந்ததால்தேங்காய் எண்ணெய் விலை உயர்வு ... 37 நகரங்களில் எம்.டி.எஸ்., சேவை 37 நகரங்களில் எம்.டி.எஸ்., சேவை ...
விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
00:59

நடப்பாண்டில், ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், உள்நாட்டில் விமான பயணம் மேற் கொண்டோரின் எண்ணிக்கை, 0.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.60 கோடியாக அதிகரித்துள்ளது.இது, சென்ற 2012ம் ஆண்டு இதே காலத்தில், 2.58 கோடியாக இருந்ததுஎன, விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்கள்:கோடை விடுமுறைக் காலம் என்பதால், சென்ற மே மாதம், உள்நாட்டில் அதிக அளவில், ”ற்றுலா தலங்களுக்கு செல்ல விமானத்தை பயன்படுத்திஉள்ளனர்.இதன்படி, சென்ற மே மாதம், 5 விமான நிறுவனங்கள், 57 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளன. இது, நடப்பாண்டின், முதல் ஐந்து மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச விமான பயணிகளின் எண்ணிக்கையாகும்.சென்ற ஆண்டு, இதே காலத்தில், மேற்கண்ட, 5 விமான நிறுவனங்கள், 54.50 லட்சம் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கியுள்ளன.
நடப்பாண்டு, மார்ச் மாதத்தில், உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, 1.59 சதவீதம் உயர்ந்து, 51.80 லட்ச மாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 51 லட்சமாக இருந்தது.உள்நாட்டில், சென்ற மே மாதம், விமான பயணிகளை கையாளும் திறன், 0.6 சதவீதம் குறைந்திருந்த போதிலும், கோடை விடுமுறை என்பதால், விமானங்களுக்கான தேவை, 3.9 சதவீதம் அதிகரித்திருந்தது.குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும், இன்டிகோ நிறுவனம், உள்நாட்டு விமான சேவையில், தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது.
இன்டிகோ நிறுவனம்:மூன்று பயணிகளில், ஒருவர் வீதம், இன்டிகோ விமான சேவையை தேர்வு செய் கின்ற னர்.சென்ற மே மாதம், உள்நாட்டு விமான சேவையில், இன்டிகோ நிறுவனத்தின் பங்களிப்பு, 29,5 சதவீதம் வளர்ச்சி கண்டு, புதிய சாதனை படைத்தது.இது, ஜெட் ஏர்வேஸ் மற்றும் அதன் ஜெட் லைட் விமான நிறுவனங்களின் சந்தை பங்களிப்பான, 22.5 சதவீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்-இந்தியா:மதிப்பீட்டு மாதத்தில், ஏர்- இந்தியாவின் சந்தை பங்களிப்பு, 19.1 சதவீதமாக உள்ளது.நடப்பாண்டு முதல், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜெட்லைட் நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, முறையே 17.1 சதவீதம் (20 சதவீதத்தில் இருந்து) மற்றும், 5.4 சதவீதம் (6.2 சதவீதத்தில் இருந்து) என்ற அளவில் குறைந்துள்ளது.சென்ற மே மாதம், ஒட்டுமொத்த விமான பயணத்தில், இருக்கை அடிப்படையில், பயணிகளை ஏற்றிச் சென்ற வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வளர்ச்சி, 69.4 சதவீதத்தில் இருந்து, 75.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த வளர்க்சி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், 77.2 சதவீதமாக (71.8 சதவீதம்) அதிகரித்துள்ளது.எனினும், இது, விமான போக்கு வரத்து துறையின், சராசரி அளவான, 84.6 சதவீதத்தை விட, குறைவாகும்.சென்ற மே மாதம், இன்டிகோ நிறுவனம், 10 விமான இருக்கைகளுக்கு, 9 பயணிகள் வீதம் சேவை மேற்கொண்டு, இப்பிரிவில், 89.6 சதவீத பங்களிப்புடன் சாதனை படைத்துள்ளது.
விடுமுறை காலம்:இரண்டாவது இடத்தில் உள்ள கோ ஏர் நிறுவனம், மொத்த விமான பயண இருக்கையில், 85.8 சதவீத அளவிற்கு, விமான பயணிகளை கையாண்டுள்ளது. மூன்றாவது இடத்தை, ஏர்-இந்தியா (82 சதவீதம்) பிடித்துள்ளது.உள்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையிலும், விடுமுறைக் காலம் என்பதால், சென்ற மே மாதம், விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)