பதிவு செய்த நாள்
21 ஜூன்2013
01:47
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு அதிரடியாக, 496 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 20,512 ரூபாய்க்கு விற்பனையானது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், தங்கம் விலை, கடந்த இரு தினங்களாக குறைந்து உள்ளது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,626 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,008 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 28,090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று தங்கம் விலை, கிராமுக்கு, 62 ரூபாய் குறைந்து, 2,564 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 496 ரூபாய் சரிவடைந்து, 20,512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 670 ரூபாய் வீழ்ச்சிகண்டு, 27,420 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 45.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 42,380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, தங்க ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "சில தினங்களாக, சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டில் தங்கம் விலை சரிவடைந்துள்ளது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|