ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு ... தங்கம் விலையில் ஏற்றம்! சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு தங்கம் விலையில் ஏற்றம்! சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு ...
நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களில்... ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.33 ஆயிரம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2013
06:10

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய, இரு மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய்மதிப்பின் அடிப்படையில், 33,330 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2012-13ம் நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (30,904 கோடி ரூபாய்) காட்டிலும், 7.85 சதவீதம் அதிகமாகும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜி.ஜே.இ.பி.சி.,) வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவரத்தினங்கள்:இதேபோன்று,கணக்கீட்டு காலத்தில்,டாலர் மதிப்பின் அடிப்படையிலான, இவற்றின் ஏற்றுமதி, 5.16 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,798 கோடி டாலரில்இருந்து, 6,098 கோடி டாலராக உயர்ந்துள்ளது.உலக நாடுகள், பொருளாதார மந்த நிலையிலிருந்து, மீண்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல் மற்றும் மே), நம்நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி ‹டுபிடிக்க துவங்கியுள்ளது.
இதனை பிரதிபலிக்கும் விதமாக, நம்நாட்டின் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் ஏற்றுமதி முறையே, 303 சதவீதம் மற்றும் 140 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது. இதே போன்று, கச்சா வைர ஏற்றுமதியும், 67 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேவை வளர்ச்சி:ஆக, சர்வதேச அளவில், நம்நாட்டின் ஆபரணங்களுக்கான தேவை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, ரூபாய்மதிப்பு அடிப்படையில், 44.34 சதவீதம் வளர்ச்சி கண்டு, 13,688 கோடி ரூபாயிலிருந்து, 19,757 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
டாலர் மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 260 கோடி டாலரிலிருந்து, 361 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 48.06 லட்சம் காரட்டிலிருந்து, 58.09 லட்சம் காரட்டாக உயர்ந்து உள்ளது.அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய்மற்றும் டாலர் மதிப்பின் அடிப்படையில் சரிவை கண்டுள்ளது.
தங்க நாணயங்கள்: ரூபாய்மதிப்பின் அடிப்படையில் இவற்றின் ஏற்றுமதி, 44.76 சதவீதம் குறைந்து, 10,641 கோடியிலிருந்து, 5,878 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, டாலர் மதிப்பின் அடிப்படையிலான, தங்கம் ஆபரணங்கள் ஏற்றுமதி, 45.86 சதவீதம் சரிவடைந்து, 206 கோடி டாலரிலிருந்து, 107 கோடி டாலராக குறைந்துள்ளது.
இதே போன்று, தங்கப் பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதியும், ரூபாய்மதிப்பு அடிப்படையில், 45.01 சதவீதம் குறைந்து, 4,617 கோடி ரூபாயிலிருந்து, 2,539 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.மேலும், இவற்றின் ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையிலும், 46.18 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 87 கோடி டாலரிலிருந்து, 47 கோடி டாலராக குறைந்துள்ளது.
வெள்ளி ஆபரணங்கள்:நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல் மற்றும் மே), நாட்டின் நவரத்தினங்கள் ஏற்றுமதி, ரூபாய்மற்றும் டாலர் மதிப்பு அடிப்படையில், சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது.இதன்படி, ரூபாய்மதிப்பின் அடிப்படையில் இவற்றின் ஏற்றுமதி, 140.15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 226 கோடி ரூபாயில் இருந்து, 542 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே போன்று, டாலர் மதிப்பின் அடிப்படையிலும், இவற்றின் ஏற்றுமதி, 134.66 சதவீதம் உயர்ந்து, 4.22 கோடி டாலரிலிருந்து, 9.90 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய்மதிப்பு அடிப்படையில், 303.35 சதவீதம் வளர்ச்சிகண்டு, 394 கோடியிலிருந்து, 1,591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே போன்று, இவற்றின் ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையிலும், 293.97 சதவீதம் அதிகரித்து, 7.39 கோடி டாலரிலிருந்து, 29.13 கோடி டாலராக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், முத்துக்கள் ஏற்றுமதி, ரூபாய்மதிப்பு அடிப்படையில், 8.29 கோடியிலிருந்து, 5.22 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.அதேசமயம், செயற்கை கற்கள் ஏற்றுமதி, 57.71 கோடி ரூபாயிலிருந்து, 79.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கச்சா வைரம்:நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், நாட்டின் கச்சா வைரம் ஏற்றுமதி, ரூபாய்மதிப்பு அடிப்படையில்,66.63 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,234 கோடியிலிருந்து, 2,057 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், டாலர் மதிப்பின் அடிப்படையிலான இவற்றின் ஏற்றுமதி, 62.17 சதவீதம் உயர்ந்து, 23.22 கோடி டாலரிலிருந்து, 37.67 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், அளவின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 53.41 லட்சம் காரட்டிலிருந்து, 84.54 லட்சம் காரட்டாக அதிகரித்துள்ளது என, ஜி.ஜே.இ.பி.சி.,யின் தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)