தங்கம் விலையில் ஏற்றம்! சவரனுக்கு ரூ.136 அதிகரிப்புதங்கம் விலையில் ஏற்றம்! சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு ... ஒரு கோடி டன் கோதுமையை விற்க மத்திய அரசு முடிவு! ஒரு கோடி டன் கோதுமையை விற்க மத்திய அரசு முடிவு! ...
மானிய விலை சிலிண்டரால் எல்.பி.ஜி., சிலிண்டர் உபயோகம் குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2013
15:11

சென்னை : அரசு அறிவித்துள்ள மானிய விலை சிலிண்டர் திட்டத்தின் மூலம் எல்.பி.ஜி., எனப்படும் சாதாரண சமையல் சிலிண்டரின் விற்பனை நாடு முழுவதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2 மாதங்களாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டரின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எல்.பி.ஜி., சிலிண்டர் விற்பனை 0.7 சதவீதம் குறைந்துள்ளது.இந்த சரிவு மே மாதத்தில் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான எல்.பி.ஜி., சிலிண்டரின் எண்ணிக்கை குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 மட்டுமே என அரசு நிர்ணயித்ததை அடுத்து 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இது அமலுக்கு வந்தது. இருப்பினும் கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தி 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு உத்தரவிட்டது. 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை எல்.பி.ஜி., சிலிண்டர் ஒன்றின் விலை சென்னையில் ரூ.398 ஆகவும், டில்லியில் ரூ.410 ஆகவும் உள்ளது. இதே சமயம் மானியம் அல்லாத சிலிண்டரின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு சென்னையில் ரூ.792 ஆகவும், டில்லியில் ரூ.802 ஆகவும் உள்ளது. அரசு நிர்ணயித்த 9 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு மானியம் கிடையாது.

2012 ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2013 ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் சமையல் சிலிண்டரின் விற்பனை 2.5 மில்லியன் டன்னில் இருந்து 2.4 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. 3 மாநில எண்ணெய் நிறுவனங்கள் அளித்துள்ள புள்ளிவிபர கணக்கின்படி 2012-2013 ம் ஆண்டில் அதிகரிக்கும் என நினைத்த எல்.பி.ஜி., சிலிண்டர் விற்பனை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் மீண்டும் சமையல் உபயோகத்திற்கான எல்.பி.ஜி., சிலிண்டர் பக்கம் வருவார்கள் என எண்ணெய் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டரின் விற்பனை சரிந்திருந்தாலும், வியாபார பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டரின் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார சரிவு காரணமாக நடப்பு ஆண்டின் மே மாதத்தில் அனைத்து பெட்ரோலிய பொருட்களின் விற்பனையும் 1.7 சதவீதம் குறைந்துள்ளது. எல்.பி.ஜி., சிலிண்டர் மட்டுமல்ல டீசல் வாகனங்களின் விற்பனையும் சரிந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)