பதிவு செய்த நாள்
22 ஜூன்2013
23:28
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 496 ரூபாய் குறைந்துள்ளது.பொருளாதார மந்த நிலையில் இருந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சில நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள், தங்கத்தை தவிர்த்து, மாற்று திட்டங்களில், முதலீடு செய்து வருகின்றனர்.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,536 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,288 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை, கிராமுக்கு, 17 ரூபாய் உயர்ந்து, 2,553 ரூபாய்க்கும் சவரனுக்கு, 136 ரூபாய் அதிகரித்து, 20,424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 180 ரூபாய் உயர்ந்து, 27,300 ரூபாய்க்கு விற்பனையானது.
ஒரு கிராம் வெள்ளி, 44.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,980 ரூபாய்க்கும் விற்பனையானது.தங்கம் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டாலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதன் விலை கிராமுக்கு, 62 ரூபாயும், சவரனுக்கு, 496 ரூபாயும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|