கடந்த வாரத்தில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.496 குறைவுகடந்த வாரத்தில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.496 குறைவு ... டீசல் மொத்த விற்பனையில் 41 சதவீதம் வீழ்ச்சி:இரட்டை விலை கொள்கையால்... டீசல் மொத்த விற்பனையில் 41 சதவீதம் வீழ்ச்சி:இரட்டை விலை கொள்கையால்... ...
தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2013
23:35

மும்பை:சென்ற, 2012 - 13ம் நிதியாண்டில், ஐ.சி.ஐ.சி.ஐ புருடன்ஷியல், எச்.டீ. எப்.சி லைப் இன்‹ரன்ஸ் உள்ளிட்ட, எட்டு முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் நிகர லாபம், ஒட்டு மொத்த அளவில், 5,388 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5,018 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, மதிப் பீட்டு நிதியாண்டில், இந்நிறுவனங்களின் நிகர லாபம், 7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
ஐ.சி.ஐ. சி.ஐ புருடன்ஷியல் லைப் :இத்துறை நிறுவனங்களின் ஒட்டு மொத்த முதல் பிரிமிய வருவாயில், இந்த எட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும், 70 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது.தனியார் ஆயுள் காப்பீட்டு துறையில், முன்னிலையில் உள்ள ஐ.சி.ஐ. சி.ஐ புருடன்ஷியல் லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், சென்ற 2012-13ம் நிதியாண்டில்,1,496 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதி யாண் டில், 1,384 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
பிர்லா சன்லைப்:இதே போன்று, எச்.டீ.எப்.சி லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 66 சதவீதம் வளர்ச்சி கண்டு, 271 கோடியிலிருந்து, 451 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், எஸ்.பீ.ஐ லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 556 கோடியிலிருந்து, 622 கோடி ரூபாயாகவும், பிர்லா சன்லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 18 சதவீதம் அதிகரித்து, 461 கோடியிலிருந்து, 541 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.இந்நிலையில், மேக்ஸ் லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், சென்ற நிதியாண்டில், 8 சதவீதம் குறைந்து, 460 கோடியில்இருந்து, 423 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
இதே போன்று, கோட்டக் லைப் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனங்களின் நிகர லாபம் முறையே, 7 சதவீதம் மற்றும் 2 சதவீதம் குறைந்துள்ளது.அதேசமயம், ரிலையன்ஸ் லைப் இன்‹ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2 சதவீதம் உயர்ந்து, 372 கோடியிலிருந்து, 380 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆயுள் காப்பீட்டு முகவர்கள்: சென்ற நிதியாண்டில், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் மிகவும் ”ணக்கம் கண்டன. மேலும், 2 லட்சம் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், இத்துறையை விட்டு வெளியேறி உள்ளனர். இது போன்ற ‹ழ்நிலையிலும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் நிகர லாபம், ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)