தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் லாபம் அதிகரிப்புதனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு ... டீசல் மொத்த விற்பனையில் 41 சதவீதம் வீழ்ச்சி:இரட்டை விலை கொள்கையால்... டீசல் மொத்த விற்பனையில் 41 சதவீதம் வீழ்ச்சி:இரட்டை விலை கொள்கையால்... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பிரமிப்பு எல்லாவற்றிலும் ஹோண்டா அமேஸ்...! ஒரு பார்வை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2013
12:54

உலகின் மிகச்சிறந்த பெட்ரோல் என்ஜின்களை உருவாக்கி பெயர் பெற்றுள்ள ஜப்பானிய ஹோண்டா நிறுவனம் தற்போது டீசல் என்ஜின் கார் தயாரிப்பில் நுழைந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டாவின் அமேஸ், iDTec டீசல் வெர்ஷனிலும் iVTec பெட்ரோல் வெர்ஷனிலும் வெளிவந்து தன் வாடிக்கையாளர்களை பெருமளவில் திருப்திப்படுத்தியுள்ளது. தன் பொறியியல் சிறப்புகளுக்குப் உற்பத்தி யுத்திகளுக்கும் உலகளவில் பல விருதுகளை வென்றுள் ஹோண்டா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் எரிபொருள் சிக்கனம், அழகான தோற்றம், நியாயமான விலை போன்ற எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு இந்திய வாகன சந்தையில் தனக்கென நிலையான முன்னனி இடத்தை பிடிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளது அமேஸ் காரின் வடிவமைப்பின் மூலம்.

அமேஸின் பிரமிப்பான சக்தி

அமேஸின் 88 BHP சக்தி தரும் பெட்ரோல் என்ஜினும் 100 BHP சக்தி தரும் டீசல் என்ஜினும் இந்த செக்மன்ட்களின் மிகச் சிறந்த செயல்திறனுடன் விளங்குகிறது. ஹோண்டா நிறுவனம் அமேஸில் டீசல் என்ஜினுக்கு அதிக பவரை அளிக்கும்படி வடிவமைத்துள்ளது மிகவும் புத்திசாலித்தனமான முடிவாகும். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் பவர் கிட்டத்தட்ட சிறு வித்தியாசத்தில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் டீசல் என்ஜினின் அதிகபட்ச வேகம் 175 கி.மீ., லிட்டருக்க என்பதுடன் 0 - 100 கி.மீ., வேகத்தை 12.5 நொடியில் அடைகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 165 கி.மீ., லிட்டருக்கு என்றும் 0 - 100 கி.மீ., 13.3 நொடியில் அடைகிறது. டீசல் என்ஜின்களில் பிக் அப் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் உள்ளது அமேஸ் டீசல் வெர்ஷனின் பிக் அப்.
எர்த் டிரீம் டெக்னாலஜி- பிரமிப்பூட்டும் தொழில்நுட்பம்

அமேஸின் 1.5லி

iDTEC டீசல் இன்ஜினின் தொழில்நுட்பம் "எர்த் டிரீம் டெக்னாலஜி' என்ற ஹோண்டாவின் சிறப்பான தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. மிகவும் லேசான எடைக் கொண்ட இன்ஜின், உராய்வுகள் அற்ற புதுமையான கண்டுபிடிப்புகள் கொண்ட பாகங்கள், அலுமினியத்தால் ஆனதினால் வெப்ப மேலாண்மை சிறப்பாக இருப்பது, இக்னீஷன் வெப்பத்தை விரைவாக அடைவது மற்றும் டர்போ சார்ஜரினால் அதிக காற்று எரிபொருளுடன் இணைந்து போன்ற பல அனுகூலமான அம்சங்கள் இந்த இன்ஜினில் இருக்கிறது. அதனால் தான் அதிகபட்ச பவரையும் டார்க்கையும் வழங்குவதுடன் 25.8 கி.மீ., லிட்டருக்கு என்ற சிறப்பான மைலேஜையும் வழங்குகிறது.

பிரமிப்பான வெளித்தோற்றம்

கிரோமினால் ஆன முன்புற கிரில், அலாய்வீல், அழுத்தமான கோடுகள்,வளைவுகள் கொண்ட எடுப்பான தோற்றம் இதனை கம்பீரமான வடிவமைப்புடையதாக்குகிறது, ஓவிஆர்எம் இன்டிகேட்டர்கள், பின்பக்க லேம்ப், கண்ணைக் கவரும் பின்புற கிரோம் கிரில்லும் அதனுடன் சேர்ந்த கவர்ச்சியான காம்பி லேம்ப்களும் இதனை மேலும் அழகாக்குகிறது.

உட்புற பிரமிப்பு

* அமேஸின் உட்புறம் மிகவும் நளினமாகவும், மிதமாகவும் இருக்கிறது. இதன் முக்கிய அம்சங்கள்.
* எலக்ட்ரானிக் மடிக்கக் கூடிய வெளிப்புற ரியர்வியூ மிர்ரர். (OVRM)
* யுஎஸ்பி - ஏயுஎக்ஸ் இன் கொண்ட மியூசிக் சிஸ்டம்.
* மாற்றம் செய்துக் கொள்ளக்கூடிய ஸ்டியரிங் வீல்.
* முன்புறம் டாஷ்போர்டில் ஆடியோ சிஸ்டம், "ஏசி' போன்ற எல்லாமே நடுமையத்திலேயே முடிந்து விடுவதால் ஓட்டுனர்களின் கட்டுப்பாட்டிலேயே இவைகளை சிறப்பாக இயக்க முடிகிறது.
* 4 மீட்டர் அளவிற்கு குறைவாக இருந்தாலும் 400லிட்டர் பூட் ஸ்பேஸ் இதிலுள்ளது.

பிரமிப்பான பாதுகாப்பு அம்சங்கள்

அமேஸில் உயர் கம்பாட்டிபிலிட்டி இன்ஜினியரிங் (ஏஎஸ்) உள்ளதால் அதிக தற்காப்பு அம்சங்கள் அதாவது வேறு வாகனத்துடன் மோதும் போது ஏற்படும் சேதம் குறைவாகும். இதில் இரட்டை எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இபிடியுடன் உள்ளது. அமேசிஸ் முகப்பு வடிவமைப்பு பாதசாரிகள் காயம்படுவதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அமேஸின் பிரமிப்பு


அழகான வடிவமைப்பு, "மனிதன் அதிகபட்சம்இயந்திரம் குறைந்தபட்சம்' என்ற கொள்கைக்கு ஏற்ப இக்காரில் இயந்திரங்களின் அளவு குறைவாகவும், மனிதர் புழங்கும் இடம் அதிகமாகவும் இருப்பது, சிறப்பான மைலேஜ் என்ற பல பிரமிப்புகளை உள்ளடக்கியுள்ளது இந்த சிறிய காம்பேக்ட் செடான் கார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)