தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் லாபம் அதிகரிப்புதனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு ... டீசல் மொத்த விற்பனையில் 41 சதவீதம் வீழ்ச்சி:இரட்டை விலை கொள்கையால்... டீசல் மொத்த விற்பனையில் 41 சதவீதம் வீழ்ச்சி:இரட்டை விலை கொள்கையால்... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சாலையில் தீப்பொறியாய்... ஹீரோவின் இக்னைட்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2013
13:19

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரும் சாமானிய மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் நிறுவனமுமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்திய பைக்தான் இக்னைட்டர் 125. கம்பீரமான தோற்றத்துடன் சற்றே வித்தியாசமாகவும் இதன் அமைப்பு உள்ளது. பக்கவாட்டில் பார்க்கும்போது சற்றே முரட்டுத்தனமான தோற்றத்தையும் இது கொடுக்கிறது. புதுமையான தொழில்நுட்ப அம்சங்கள், சிறந்த செயல்திறன், நிறைந்த மைலேஜ் இவற்றுடன் நியாயமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுதான் இக்னைட்டர்.

இக்னைட்டரின் தோற்றம்

ஹோண்டா ஸ்டன்னர் போன்ற தோற்றத்தை இக்னைட்டர் கொடுத்தாலும் இதில் செய்யப்பட்டுள்ள சில பொறியியல் கலைநுட்ப மாற்றங்கள் இதன் தோற்றத்தை மிகவும் ஸ்டைலாகவும் அதிக கம்பீரமாகவும் மாற்றியுள்ளது. புதிய முன்புற கவுல் அதில் நடுவில் உள்ள ட்ரப்பிஜாய்ட் வடிவ ஹெட்லைட், வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ள ஃப்யூவல் டேங்க், இரட்டை வண்ணங்களில் உள்ள ரியர் வ்யூ மிர்ரர், இரண்டாய் பிரிக்கப்பட்டுள்ள சீட், அழகான டெயில் லேம்ப் போன்றவைகளும், பெரும்பாலான பகுதி கருப்பு நிறத்தில் உள்ளதால் வண்டியின் நிறம் எடுப்பாக இருப்பதுடன் கம்பீரமாகவும் தோற்றமளிக்கிறது. இதன் கன்சோல் அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டல் கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்னைட்டரின் செயல்திறன்


இதன் சூப்பர் ஃபாஸ்ட் ATFTஎன்ஜின் ஏர் கூல்ட், ஃபோர் ஸ்ட்ரோக், 125சிசி OHC என்ஜினாகும். இது அதிகபட்சமாக 11 bhp பவரை 8000ஆர்பிஎம்மில்லும் 11 NM டார்க்கை 5000 ஆர்பிஎம்மில் வழங்கக்கூடியதாகவும் உள்ளது. இதன் ஆக்சிலரேஷன் மிகச்சிறப்பாக 0-60 கிலோமீட்டர் வேகத்தை ஏழு நொடிக்கும் குறைவான நேரத்தில் எட்டுகிறது. இக்னைட்டரின் அதிகபட்ச வேகம் 100 கிலோமீட்டர் மணிக்கு ஆகும். இதன் சக்தி வாய்ந்த என்ஜினின் செயல்திறனாய் லிட்டருக்கு 55 கிலோமீட்டர் மைலேஜ் கொடுப்பதாக கூறப்படுகிறது. 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க்கை நிரப்பிவிட்டால் கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் வரை நிம்மதியாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்னைட்டரின் சொகுசு அம்சங்கள்


இதன் அகலமான ஹாண்டில்பார் ஓட்டுபவருக்கு வசதியாக இருக்கும்படி உள்ளது.

உள்ளங்கைக்கு இதனால் ஹேண்டில் க்ரிப் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

தனியாக சீட் பின்புறம் அமர்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதும் அதன் அமைப்பும் சிறப்பாக இருக்கிறது.

பைக் சீட்டின் அடியில் பொருட்கள் வைத்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் பராமரிப்பு தேவைப்படாத பாட்டரியும், ட்யூப்லெஸ் டயரும் ஓட்டுபவரை தேவையற்ற திடீர் பிரச்னைக்குள் ஆழ்த்தாமல் அமைதியாக இருக்க உதவுகிறது.

முன்புற டிஸ்க் ப்ரேக்கும், இதன் சிறப்பான சஸ்பென்ஷனும் ஸ்திரமான பயணத்திற்கு வழிவகுக்கிறது.

இக்னைட்டரின் ட்ரான்ஸ்மிஷன்

இதன் என்ஜின் 5 ஸ்பீட் மானுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்”டன், ஒரு கியர் டவுன் ஷிஃப்ட்டிலும் மீதி நான்கு கியர்கள் அப் ஷிஃப்ட்டிலும் இயங்குகிறது. இதன் கியர் வெட் மல்டி ப்ளேட் க்ளட்ச்”டன் சேர்ந்து சிறப்பாக இயங்குகிறது.

சஸ்பென்ஷன்

முன்புறம் டெலஸ்கோப்பிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்பருடனும் பின்புறம் ஸ்விங் ஆர்ம் 3 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்பருடனும் வருவதால் மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளின் பயணமானாலும் ஓட்டுவதற்கு கஷ்டமாக இருப்பதில்லை எனலாம்.

இக்னைட்டர் கையாளச் சுலபம்


இக்னைட்டரை கையாள்வதும் மிகச் சுலபமாகவே உள்ளது. இதன் குறைவான எடை கையாளச் சுலபமாக இருப்பதுடன் மைலேஜிற்கும் உதவுகிறது. அகலமான ஹேண்டில்பாரும், அகலமான பின்புற டயரும் குறுகிய திருப்பங்களிலும் சாலையின் ஸ்திரத்தன்மையை இழப்பதில்லை. இதன் டிஸ்க் ப்ரேக் வேரியன்ட்டில் முன்புறம் டிஸ்க் ப்ரேக் இருப்பதால் அதிகபட்ச வேகத்திலும் கட்டுப்படுத்த சுலபமாகவே உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)