பதிவு செய்த நாள்
28 ஜூன்2013
09:56
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பின் தற்போது தங்கம் விலை ஒரே வாரத்தில் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில், கடந்த 7 நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான பல்பொருள் சந்தையில் (எம்.சி.எக்ஸ்) தங்கம் விலை ரூ.831 குறைந்துள்ளது. வியாழக்கிழமையன்று 10 கிராம் தங்கம் விலை ரூ.25,305 ஆக குறைந்துள்ளது. பற்றாக்குறையை தடுப்பதற்காக தங்க நகைகைளை ஏற்றுமதி செய்வதற்கு பதில் இறக்குமதி செய்ய மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. முன்னதாக ஆபரணங்களின் இறக்குமதிக்கு அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தங்கம் இறக்குமதி செய்வதற்கான வரியையும் 8 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்கம் விற்பனையாளர்கள், இறக்குமதி நிறுவனங்களிடம் இருந்து தங்கத்தை பெறுவதற்கு கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டில் தங்கம் விலை 30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|