பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
00:10
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, கடும் வீழ்ச்சி கண்டு, மீண்டும் 60 ஐ தாண்டியது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 59.66 ஆக இருந்தது.இந்நிலையில், அன்னியச் செலாவணி சந்தையில், நேற்று ரூபாய் மதிப்பு, முந்தைய நாளை விட, 0.56 கா” சரிவடைந்து, 60.22 ஆக வீழ்ச்சி கண்டது.
இதற்கு முன், கடந்த ஜூன் 26ம் தேதி, ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 60.76 ஆக வீழ்ச்சி கண்டது.நேற்று, அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக அளவில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்பனை செய்தன. மேலும், வங்கிகள் மற்றும் இறக்குமதி நிறுவனங்களுக்கு டாலருக்கான தேவை அதிகம் இருந்தது. இதனால், ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது.நடப்பு ஜூலை மாதத்தின், முதல் மூன்று நாட்களில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 84 காசு சரிவடைந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|