பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
17:13

கார் பராமரிப்பது என்பது மிக அத்தியாவசியமானது. நாம் வாங்கும்போதே அதனை பராமரிக்க தேவையான அனைத்து வழிமுறைகளையும் கற்று கொள்வது அவசியம். அத்தகைய கார் பராமரிப்புக்கு என பலவழிமுறைகள் உள்ளன. அதில் முக்கியமானவை கார் பராமரிப்புக்கு என சில முக்கிய கருவிகள் நமது காரில் இருப்பது முக்கியம்.
சில நேரங்களில் கார் சாலையில் திடீரென நின்றுவிடும் போது நம்மை பாதுகாப்பன இத்தகைய கருவிகள்தான். இக்கருவிகள் காரில் ஏற்பட்ட பழுதை நீக்க உதவிபுரிகின்றன.
காருக்கு என அடிப்படை கருவிகள் கண்டிப்பாக காருடன் இருக்கும். அது போலவே காருக்கு உதவிபுரிய கூடிய முக்கியமான சில கருவிகளும் காருடன் எடுத்து செல்ல வேண்டும். அவை நமது சாலை பயணத்தில் ஏற்படும் பாதிப்புகளை நீக்கும். ஆபத்பாண்டவனாக திகழும். டயர் மாற்றுவதற்கும், ஆயில் மாற்றுவதற்கு மற்றும் டயர் அழுத்தத்தை கணிப்பதற்கு ஏற்ற முக்கிய கருவிகள் நமது காருடன் இருப்பது மிகவும் அவசியமானது. சில நேரங்களில் இவைதான் நம்மை பாதுகாப்பதோடு நமது பணத்தையும் மிச்சப்படுத்தும்.
ஜாக்கி ரின்ச்
ஜாக்கி மற்றும் ரின்ச் மிக முக்கியமான கருவிகள். இவை இருந்தால் மட்டுமே அதிக தூரம் கார் பயணம் இனிமையாகும். டயர் ஏதேனும் பாதிப்படைந்து மாற்ற வேண்டி இருக்கும் போது ஜாக்கி தான் கீழ்நின்று தாங்கி பிடிக்கும். அப்போது தான் டயரை மாற்ற முடியும். ரிஞ்ச் மூலமே வீல் போல்ட் அல்லது வீல் லக்ஸ் கழட்ட முடியும். சில நேரத்தில் ரின்ச் மூலமே ஆயில் டேங்க் போல்ட் கழற்ற முடியும். எனவே ஜாக்கி மற்றும் ரின்ச் காரின் மிக முக்கிய கருவிகள்.
புனல்:
ஆயில் ஏதேனும் மாற்ற வேண்டி இருக்கும் போது, புனல் மிக அவசியமானது. பிரேக் ஆயில், கியர் ஆயில், ஆயில் போன்றவை மாற்ற வேண்டி வந்தால் புனல் மூலமே அதன் உள்ளே செலுத்த முடியும். மேலே ஒழுகியவாறு ஊற்றினால் காரின் வேறு பகுதிகளில் பட்டு வேறு பாதிப்புகள் உண்டு பண்ணும்.
டயர் அழுத்தம் அறியும் கருவி:
(Tire Pressure Gauge) நமது காருக்கு உதவி புரியக்கூடிய சிறப்பான கருவிகளில் ஒன்று (Tire Pressure Gauge) எனும் டயர் அழுத்தம் அறியும் கருவி. இதன் மூலம் டயர் அழுத்தம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நாமே அறிந்து செயல்பட முடியும்.
சிறந்த அழுத்தத்துடன் உடைய டயர் மூலம் தான் எரிபொருள் இழப்பு ஏற்படாமல் பயணிக்க முடியும். எரிபொருள் சிக்கனத்திற்கு உதவி புரியும் டயரின் அழுத்தத்தை கவனிக்க வேண்டியது அவசியம். அழுத்தம் குறைவான டயருடன் பயணிக்கும்போது 3 முதல் 4 சதவீதம் வரை எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. எனவே நமது வெகுதூர பயணங்களின் போது டயர் பிரஷர் அறிவது அவசியம். டயர் அழுத்தம் அறிவது மிகச் சுலபம். அந்த கருவியில் உள்ள நாப்பை டயரின் நாஸரில் அழுத்திவிட்டால் டயரின் அழுத்தம் தெரியவரும். அதனை நமது கார் குறிப்பேட்டில் உள்ள அளவோடு ஒப்பிட்டு சரிபார்த்து கொள்ளலாம். காரின் பாதுகாப்பு பயணத்திற்கும், சிரமமற்ற பயணத்திற்கு இத்தகைய கருவிகள் உதவுகின்றன. எனவே காரில் இருக்க வேண்டிய மிக அத்தியாவசியமான கருவிகளாக இவை கருதப்படுகின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|