பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
17:15

மஹிந்திரா டூ வீலர்ஸ் தன் புதிய மஹிந்திரா சென்சுரோ மோட்டார் சைக்கிளை ஜூலை 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. 100 - 110 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பிரிவில் அதிக செயல்திறன், புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மையுடன் மஹிந்திரா பிராண்ட்டின் பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்திய இரு சக்கர வாகன வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கேற்ற தொழில்நுட்பங்களை உட்புகுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது சென்சுரோ. இதனால் "அதிக எண்ணிக்கையுள்ள வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், அதிக போட்டியுள்ள "மோட்டோ ஜிபி மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப்பில் தங்கள் இருப்பை உணர்த்தும் வகையிலும் செஞ்சுரோ திகழ்கிறது' என்று கூறினார், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.
இதன் ஸ்டைலான, முரட்டுத்தனமான தோற்றமும் புதிய தொழில்நுட்பம் மற்றும் சாதுர்யமான அம்சங்களும் இந்த பிரிவு மோட்டார் சைக்கிள்கள் எதிலும் காணமுடியாததாகும் என்று அறிமுக விழாவில் மஹிந்திரா -மஹிந்திராவின் டூவிலர் பிரிவின் தலைவர் அனூப் மாதூர் கூறினார். இந்திய சாலைகளுக்கு ஏற்ப 173மிமி கிரவுன்ட் கிளியரன்சுடனும், 1265மிமி வீல் பேசுடனும் ஸ்திரமான பயணத்திற்கு உத்திரவாதமளிக்கிறது சென்சுரோ. அகலமான இருக்கை, 5 ஸ்டெப் பின்புற சஸ்பென்ஷன் நீண்ட தூர பிரயாணத்தை சுகமாக்குகிறது. பராமரிப்பு தேவைப்படாத பாட்டரி மற்றும் ஐந்து வருட உத்தரவாதம் வாடிக்கையாளர்களின் நிம்மதியை கூட்டுகிறது.
இதன் சாதுர்யமான Mci5 என்ஜின் சிறந்த செயல்திறனுடன், அதிக மைலேஜையும் வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பைக்கில் என்ஜின் இம்மொபலைசருடன் இணைந்த ஆன்ட்டி தெப்ட் அலார்ம், ரிமோட் பிலிப் கீ, பைன்ட் மீ லேம்ப், கைட் லாம்ப், டிஜிட்டல் டாஷ்போர்ட், சர்வீஸ் ரிமைன்டர், எகானமி மோட் இன்டிகேட்டர் போன்ற வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|