பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
17:30

மும்பை : கடந்த இரு தினங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூலை 4ம் தேதி) ஐ.டி. நிறுவன பங்குகளின் உதவியால் உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் 233 புள்ளிகளும், நிப்டி 66 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஒரு பக்கம் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு கவலையை கொடுத்து வந்தாலும் மற்றொரு பக்கம் ஐ.டி. தொடர்பான நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்து வருகிறது. இந்திய ஐ.டி. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் தான் பெரும் லாபம் பெற்று வருகின்றன. தற்போது ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் ஐ.டி. நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 233.08 புள்ளிகள் உயர்ந்து 19,410.84-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 66.05 புள்ளிகள் உயர்ந்து 5,836.95-ஆகவும் முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 20 நிறுவன பங்குகள் நல்ல லாபம் பெற்றன. குறிப்பாக ஐ.டி. நிறுவன பங்குகளான டி.சி.எஸ்., 3.26 சதவீதமும், இன்போசிஸ் 2.29 சதவீதமும், விப்ரோ 2.13 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|