பதிவு செய்த நாள்
07 ஜூலை2013
01:08
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 176 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச நிலவரங்களால், சென்ற மாதம் இறுதியில், வெகுவாக குறைந்திருந்த தங்கம் விலை, கடந்த வாரத்தில் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,454 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,632 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, ஆபரண தங்கம் விலை கிராமுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்து, 2,458 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 32 ரூபாய் அதிகரித்து, 19,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 42.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,015 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை கிராமுக்கு, 22 ரூபாயும், சவரனுக்கு, 176 ரூபாயும் உயர்ந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|